தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா?


தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்ற NGO தூத்துக்குடி மாவட்டத்தில்  19 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை நடத்துவத்துவதாக கூறியுள்ளது.   இந்த NGOவின் தலைவர் பிஷப் இவான் அம்புரோஸ் தனது பதவியை கார்பரேட் மேனேஜர் என்று திடீரென்று மாற்றிக் கொண்டார். கல்வித்துறையின் அனுமதி பெறப்படவில்லை. இவர்மீதும் கல்வி முகமை மீதும் புகார் அனுப்பப்பட்டது. புகாரை பரிசீலனை செய்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர், தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலரை இப்புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டுள்ளார். முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம்போல மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி கடைசியில் அது குப்பைத் தொட்டிக்கு போகுமா என்பது தெரியாது. புகார் மனு இதோ

Complaint against Bishop Yvon Ambroise and the Tuticorin Diocesan Association

இணை இயக்குநரின் கடிதம் இதோ

JD Letter to CEO Thoothukudi directing her to take action against Bishop Yvon and the Educational Agency

முதன்மை கல்வி அலுவலர் திருமதி அனிதா அவர்கள் தனிக்கவனம் செலுத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றோம். மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு நரசிம்மன் மற்றும் திருமதி செந்தூர்கனி ஆகியோர் போல இசக்கியிடமும் பிஷப் இவானிடமும் ஏமாற மாட்டார் என்று எமது சங்கம் நம்புகிறது.

 


திருமதி செந்தூர்கனியின் உளறல் கடிதங்கள்


New Doc 2017-11-16 (2)_1திருமதி செந்தூர்கனி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் குமரகுரு பள்ளித் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பில் செயல்பட்ட திரு நரசிம்மன் அவர்கள் ஊழல்கள் செய்ததால் அவரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு திருமதி செந்தூர்கனி அவர்களை அன்னாருடைய இடத்தில் அரசு நியமித்தது. ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அடியோடு புதைத்து விட்டார் இவர். அடிப்படையில் இவருக்கு அனுபவமும் ஆற்றலும் கிடையாது. மாவட்ட கல்வி அலுவலராக செயலாற்ற எந்த தகுதியும் இவருக்கு கிடையாது. இப்படிப்பட்ட ஆள்தான் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தேவை போலும். கையெழுத்து மட்டுமே போட்டுக் கொண்டிருந்தார். தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு அடிமை ஆனார். குறிப்பாக தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் மற்றும் இசக்கி ஆகியவர்களின் அடிமையாக செயல்பட்டார். இவர்களின் நிர்வாகம் ஊழல் மட்டுமே நிறைந்தது. இவர்கள் நடத்தும் 19 பள்ளிகள் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்டது. இப்பள்ளிகள் மைனாரிட்டி பள்ளிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து தங்களை மைனாரிட்டி பள்ளிகள் என்று கூறிக்கொண்டு ஊழல் இராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம் ரிட் மனு 11252/2016ல் 28.06.2016 அன்று பிறப்பித்த ஆணையில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகையில் பிஷப் இவான் அம்புடோஸின் நிர்வாகத்தில் செய்ல்படும் 19 பள்ளிகளை ஆய்வு செய்து இப்பள்ளிகளில் நிலம், விளையாட்டிடம் மற்றும் மைனாரிட்டி உரிமைக்கான ஆவணங்கள் அனைத்தும் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்து உரிய சட்டப்படியான ஆணை பிறப்பிக்க உத்தரவிட்டது. Court order in WP 11252 of 2016 dated 28.06.2016 உடனே மாறுவேடத்தில் செயல்படும் இசக்கி என்ற இவானின் எடுபிடி நேரடியாகவும் நெருக்கமானவர்கள் மூலமாகவும் திருமதி செந்தூர்கனி அவர்களை சரிக்கட்டி அலுவலகத்தில் பணிபுரியிம் சம்மந்தப்பட்ட உதவியாளர்களை உரிய முறையில் கவனித்து எடுத்துக் கூறி பள்ளிகளில் எல்லா ஆவணங்களும் சரியாகத்தான் உள்ளது என்று 31.01.2017ல் ஆர்டர் போடவைத்தார் Na.Ka.No.3930 -B4-2016 dated 31.01.2017. பள்ளிகளை  23.11.2016 முதல் 28.12.2016 முடிய உள்ள நாட்களில் பார்வையிட்டதாக அப்பட்டமான பொய்யையும் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி செந்தூர்கனி எழுதினார். அந்த அளவுக்கு அவர் கனமாக கவனிக்கப்பட்டிருக்கிறார். மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். உடனே நீதி வழுவாத இந்த மாவட்ட கல்வி அலுவலர் திருமதி செந்தூர்கனி மனுதாரரையும் சம்மந்தப்பட்டவர்களையும் விசாரணை செய்ததுபோல பாசாங்கு செய்து படம் காண்பித்து 24.02.2017 நாளிட்ட கடிதத்தை எழுதி இசக்கியின் நிர்வாகத்திற்கு சாதகமான ஆர்டர் பிறப்பித்து தப்பித்து விட்டார். Na.Ka.No.3930 -B4-2016 dated 24.02.2017

19 பள்ளிகளையும் நேரில் ஆய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் நேரில் ஆய்வு செய்யவில்லை.

The Tuticorin Diocesan Association மற்றும் The Roman Catholic Diocese of Tuticorin இரண்டும் ஒன்றல்ல வெவ்வேறு என்ற உண்மை தெரியாமல் உளறிக் கொட்டியிருக்கிறார்.

ரிட் மனு 570/75ஐ மேற்கண்ட இரண்டு NGO-க்களும் தாக்கல் செய்யவில்லை. ஆனால் The Roman Catholic Diocese of Tuticorin என்ற NGO தாக்கல் செய்ததாகவும் அது மைனாரிட்டி உரிமை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

R.C.No.24541/G3/76 dated 20.11.1976 என்ற பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வாயிலாக மைனாரிட்டி உரிமை அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இணை இயக்குநர் இப்படி ஒரு செயல்முறைகள் பள்ளிக் கல்வி இயக்குநரால் அனுப்பியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்கிறார். ஆனால் திருமதி செந்தூர்கனி அவர்களோ இச்செயல்முறைகளின்படி மைனாரிட்டி உரிமை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எப்பள்ளிக்கும் முறையான நில ஆவணம் கிடையாது. இவர் இருக்கிறது என்கிறார். இப்படி பல உளறல்கள். கொடுமை என்னவென்றால் இவை எல்லாம் பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் தெரியும் முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரியும். அவர்கள் வாய் திறக்காமல் இருக்கிறார்கள்?

இப்போ விஷயம் சீரியஸ் ஆகி விட்டது. மனுதாரர் பிரச்னையை விருகிறார்போல இல்லை. மறுபடியும் ரிட் மனு 6851/2017ஐ தாக்கல் செய்து மேற்படி மாவட்ட கல்வி அலுவலரின் ஆணை தவறானது எனக் கூறி நிவாரணம் வேண்டியுள்ளார். உடனே, மேற்படி விஷயத்தில் உதவி செய்த dominicமாவட்டக் கல்வி அலுவலரின் நிலமையை யோசிக்காமல், imagesபிஷப் இவானும் கண்காணிப்பாளர் இசக்கியும் தங்களது நிர்வாகத்தின் பெயரை மாற்றி மேற்படி பள்ளிகளை The Tuticorin Diocesan Association என்ற நிறுவனம்தான் நடத்துகிறது என்று கூறியுள்ளார்கள். மேலும் இவான் தனது பதவியை கார்பரேட் மேனேஜர் என்று மாற்றிக்கொண்டார்.  இவானுக்கு 75 வயதுக்கு மேல் ஆகிறது. ரிட்டைர்டு ஆகிவிட்டார். ஞாபக மறதி அதிமாகிவிட்டதால் முன்னுக்குப் பின் முரணான கையெழுத்துக்களை போட்டு வருகிறார். வேடிக்கையான மனிதராகிவிட்டார். இசக்கிக்கு இது நன்றாகத் தெரியும். இவானின் தற்போதய நிலமையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பணவிஷயத்திலும் வேறு பல விஷயங்களிலும் சக்கை போடு போடுகிறார். தங்களது நிர்வாகத்தின் பெயரையே (Educational Agency) மாற்றியுள்ளார்கள் என்றால் பாருங்களேன். இதற்கு ஆதாரங்களை கீழே காணலாம். மேலும் பிஷப் இவானும் இசக்கியும் நிர்வாக மாற்றத்தையோ அல்லது தங்களது பதவி மாற்றத்தையோ கல்வித்துறையின் அனுமதியுடன் செய்யவில்லை. அவர்களாகவே முடிவெடுத்து அவர்களாகவே மாற்றியுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரோ அல்லது மாவட்ட கல்வி அலுவலரோ அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பணத்தை விரயமாக்குகிறார்கள்.

இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம் இசக்கிதான். இசக்கி எந்த வேலைக்கு லாயக்குன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி இருந்தும் பிஷப் இவான் இசக்கிகிட்ட முக்கியமான பொறுப்பை கொடுத்து பள்ளி நிர்வாகத்தையே சீரழித்துவிட்டார் என்று பலரும் பேசுகிறார்கள்.

Corporate Manager

 Promotion orderEsacki letter

 

 

 

 

சீராய்வு மனு 139/2007ல் மனுதாரார் The Roman Catholic Diocese of Tuticorin. இப்படி ஒரு பதிவு பெற்ற சங்கம் இல்லாத போதே பிஷப் இவான் அம்புரோஸின் தூண்டுதலின் பேரில் கற்பனையான பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் ஏமாற்றப்பட்டுள்ளது. Review Petition No.139 of 2007 decided by full bench on 12.11.2007

Marys

ரிட் மனுக்கள் 7587/2012 மற்றும் 11437/2017ல் மனுதாரர் The Tuticorin Diocesan Association. பாதிரியார் ஜெபநாதனும் பாதிரியார் சகாய ஜோசப்பும் இவைகளில் மனுதாரர்கள். இவர்கள் மேற்கண்ட 19 பள்ளிகள் உட்பட 261 பள்ளிகளை இந்த சொசைட்டி நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இதை புரியாத மாவட்ட கல்வி அலுவலர் The Roman Catholic Diocese of Tuticorin தான் பள்ளிகளை நடத்துகிறது என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் இசக்கி கொடுத்துள்ள மைனாரிட்டி விளம்புகை சான்றில் ரோமன் கத்தோலிக் டய்சிஸ் ஆஃப் தூத்துக்குடி தான் பள்ளியை நடத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு NGO-க்களும் தனித்தனியே பதிவு செய்யப்பட்டவை. அவைகளின் பதிவுச் சான்றுகளை கீழே உள்ள இணைப்புகளை க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Registration Certificate of the Tuticorin Diocesan Association S1 of 37-38 dated 14.04.1937

Registration Certificate of Roman Catholic Diocese of Tuticorin Reg.No.48/2016 dated 04.07.2016

தெளிவான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரும் நிர்வாகம் செய்த/செய்யும் சட்டவிரோதங்களுக்கு  உறுதுணையாக இருந்த கல்வி அதிகாரி திருமதி செந்தூர்கனி மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவருக்கு கொடுத்த சம்பளத்தை திரும்ப பெறவேண்டும்.  தவறாக பிறப்பித்த ஆணைகள் மூலம் செய்த சட்டவிரோதங்களை களையும் வரை ஓய்வூதிய பலன்கள் கொடுக்காதிருந்தால் மற்ற அதிகாரிகள் தங்கள் பணியை கவனமாக செய்வார்கள்.

நூற்றுக் கணக்கான ஆவணங்களும் ஆதாரங்களும் ஆவே மரியாவிடம் உள்ளன. அனைத்தையும் பிரசுரிக்க முடியாததால் ஒரு சில ஆவணங்களை மட்டும் பிரசுரித்துள்ளோம். தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்.


80 லட்சம் ரூபாய்


80 Lakhsபிஷப் இவான் அம்புரோஸ் 04.06.2016ல் ஒரு கடிதம் தயார் செய்து பாதிரியார் ரூபர்ட்டுக்கு கொடுத்துள்ளார். அக்கடிதத்தில் 14.10.2015 அன்று தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்ற சொசைட்டியின் Governing Body Meeting நடந்ததாகவும் அதில் டயோசிசன் டெப்பாசிட்டை pledge செய்து 80 லட்ச ரூபாயை வங்கியில் கடனாக பெற்று சாத்தான்குளத்தில் மேரி இம்மாகுலேட் பள்ளி ஆரம்பிப்பதற்கு கொடுப்பதாகவும் ஒரு சான்று வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்றை இங்கு பிரசுரிக்கிறோம். பிஷப் இவானின் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது உண்மைதானா என்பதை பாதிரியார்கள் சரிபார்க்கவும். ஏனெனில் மேரி இம்மாகுலேட் பள்ளிக்கான செலவுகளை புனித தோமையார் மெட்ரிக் பள்ளிதான் கொடுக்கிறது என்பதாக பலரும் பேசிக்கொள்கிறார்கள்.  பிரித்தாளும் கொள்கையை கையாளும் வந்திக்கத்தக்க பிஷப் இவான் அம்புரோஸ் இதிலும் ஏதாவது ஏடாகுடம் பண்ணியிருப்பார் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.


நீதிமன்றத்தில் பொய்கள் – இவான் அம்புரோஸ்


Yvonபிஷப் இவான் அம்புரோஸ் பண விசயத்தில் பல ஊழல்கள் செய்துள்ளார். மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதை மறைப்பதற்காக பல நாடகங்கள் ஆடுகிறார். அவரது ரகசியங்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவே ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்டத்தில் இருக்கிறார். தனக்கு வேண்டியவர்களை கைக்குள் வைத்துக் கொண்டு ரகசியமாக நிர்வாகம் செய்கிறார். அடுத்த பிஷப் வந்தால் இவரது ஊழல்கள் வெளியில் தெரிந்துவிடும் என்று பயந்து பதவியில் தொடர்கிறார். அடுத்த பிஷப் வருவதற்குள் இந்த பிரச்னையை முடித்துவிட்டால் தனது வண்டவாளங்களை மூடி மறைத்துவிடலாம் என்று திட்டமிட்டு தனக்கு பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார்.

பாதிரியார் சகாய ஜோசப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அப்பிடவிட் நகல் இணைக்கப்பட்டுள்ளது. பொய்களை எவ்வாறு சரமாரியாக சொல்லியிருக்கிறார் என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

WP.No.11437 of 2017 Affidavit

மற்றுமொரு அப்பிடவிட் பாதிரியார் ஜெபநாதன் அவர்கள் சமர்ப்பித்ததாகும். அதிலும் பொய்கள்தான் மிஞ்சி நிற்கின்றன. கீழ்கண்ட இணைப்பில் அதை வாசிக்கலாம்.

Affidavit filed in WP.No.7587 of 2012

மொத்தத்தில் பாதிரியார் ஜெபநாதனும் பாதிரியார் சகாய ஜோசப்பும் உண்மைக்கு புறம்பான விவரங்களை நீதிமன்றம் என்று கூட பாராமல் தங்களது அப்பிடவிட்டில் அள்ளி வீசியிருக்கிறார்கள். இவ்வாறு பொய்களை கூசாமல் எழுதச் சொல்லியிருப்பது பிரபல பிஷப் இவான் அம்புரோஸ் அவர்கள்தான். தல இல்லாமல் வால் ஆடுமா?

ஆசிரியர்கள் பணத்தில் உல்லாச வாழ்வு நடத்தும் இந்த  இவான் தவறு செய்யாத ஆசிரியர்களைக் கூட தண்டிக்கிற ஒரு கொடூரன். இந்த ஆளுக்கு தான் ஒரு பெரிய புனிதர் என்று நினைப்பு. இவரு சொல்லும் பொய்களுக்கும் செய்யும் சட்டவிரோதங்களுக்கும் இவருக்கு மேமோ கொடுத்து சஸ்பெண்ட் செய்வது யார்? இவர் நீதிநிலை தவறுபவர் என்று தெரிந்தும் சில கால்வருடிகளும் பதவி ஆசை பிடித்தவர்களும் இந்த கொடூரனை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். வேடிக்கை என்னவென்றால் இந்த  கொடூரனுக்கு பொன்விழா எடுக்க ஐஸ் வியாபாரி மாதிரி ஊர் ஊராக ஒரு கூட்டம் வேல மெனக்கட்டு அலயுது. கேவலம். தூத்துக்குடி மறைமாவட்டத்தை கெடுத்த இந்த நயவஞ்கனுக்கு பொன்விழா ரொம்ப முக்கியமாம். விரட்டி அடிப்பதற்குப் பதிலாக விழா எடுக்கிறார்களாம் விழா.

 


பிஷப் இவானுக்கு பொன்விழாவா?


Bishopபிஷப் இவான் அம்புரோஸ் 23.12.1967ல் குருப்பட்டம் பெற்றிருக்கிறார். இது 50வது ஆண்டு. இந்த சரித்திர புகழ்பெற்ற நாயகனின் பொன்விழாவை ஏற்கனவே நமது மறைமாவட்டத்திலும் பாண்டிச்சேரியிலும் கொண்டாடி முடிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கூட குருப்பட்டம் கொடுத்து திருச்சபையை கெடுத்துள்ளார்களே என்று மறைமாவட்டம் புலம்பிக்கொண்டிருக்கும் இவேளையில் பிஷப் இவானுக்கு மீண்டும் பெரிய அளவில் பொன்விழா ஆசை வந்துள்ளது. இந்த ஆசையை பிஷப் இவான், பாதிரியார்கள் கிருபாகரன், சகாய ஜோசப் மற்றும் நார்பட் ஆகியோரிடம்  வெளிப்படுத்தியுள்ளார் போலும். பிஷப் இவானின் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்று அப்பணியையே தலைமேல் சுமந்து இப்போது ஊர் ஊராக சென்று பாதிரியார்களையும் மக்களையும் தயார் செய்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு மேல் இம்மறைமாவட்டத்தில் இருந்து மறைமாவட்டத்தையே நாசம் செய்து குழப்பங்களையும் குளறுபடிகளையும் ஊழல்களையும் வழக்குகளையும் சொத்தாக குவித்துள்ள இந்த பிஷப் இவான் அம்புரோஸை விரட்டியடிப்பதற்குப்பதில் இன்னும்  பாதிரியார்கள் வால் பிடித்துக் கொண்டு அலைவது வேடிக்கையாக உள்ளது. இன்னும் இவரால் ஏதாவது நன்மை கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு சில பாதிரியார்கள் தங்கள் கடமைகளை மறந்து முழுமூச்சுடன் செயல்படுவது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. மொத்தத்தில் தூத்துக்குடி  மறைமாவட்டத்தில் வேடிக்கையே வாடிக்கையாக மாறிவிட்டது.  மனந்திருப்புதல், புற மதத்திலிருந்து ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு மாறுதல் என்பவை குதிரைக்கொம்பாக ஆகிவிட்டது. இவர் வந்த பிறகு பக்தியும் கிறித்தவமும் பறந்துவிட்டன. ஆண்டவர் ஏசு கிறிஸ்து எளிய மனத்தவரைத்தான் பேறுபெற்றவர் என்கிறார். பிஷப் இவான் எளிய மனத்தவரா? அல்லது சாந்தமுள்ளவரா? அல்லது நீதிக்காக பாடுபடுபவரா? தவறு செய்துவிட்டு பிறகு அதை நியாயப்படுத்தவும் அதற்காக வழக்குகள் தொடர்வதும் வக்கீல்கள் பின்னால் அலைவதுமே இவருக்கு வேலை ஆகிவிட்டது. இவருடைய காலத்தையும் நேரத்தையும் பொய் சொல்லுவதிலும் சட்டவிரோதங்கள் செய்வதிலுமே கழித்து விட்டார்.

இவ்விழா எடுக்க சொன்னதே இவர்தான் என்று பேசப்படுகிறது. இவ்விழாவிற்கு அனைத்து குருக்களும் கன்னியர்களும் விசுவாசிகளும் வரவேண்டுமாம். இவ்விழா நிகழ்வுகளையும் போலிப்புகழ் மாலைகளையும் கூட்டத்தையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து மேதகு கர்தினால் மற்றும் மற்றும் வத்திக்கான் அலுவலகத்திற்கு அனுப்பினால் பிஷப் இவான் நல்லவர் வல்லவர் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்களாம். இவர் செய்த அட்டுழியங்கள் அநீதிகள் சட்டவிரோதங்கள் அடாவடித்தனங்கள் அனைத்தும் இந்த விழா மூலம் மறையுமாம். ஒருசில நல்லவர்கள் இவரைப்பற்றி மேதகு கர்தினால் மற்றும் வத்திக்கானுக்கு எழுதியது உண்மையல்ல என்று நிரூபித்துக் காட்ட வேண்டுமாம். மறைமாவட்டமே இவருக்குப் பின்னால் இருக்கிறது என்றும் இவரை புகழ்கிறார்கள் என்றும் இவரை நேசிக்கிறார்கள் என்றும் பாப்பானவருக்கும் பிறருக்கும் தெரியப்படுத்தவேண்டுமாம். தான் ஒரு உத்தமன் என்று நிரூபிக்க வேண்டுமாம். இப்படி பலவாறு பேசப்படுகிறது. யோசித்துப் பார்த்தால் உண்மை என தோணுகிறது.

இவர் நல்லவர் என்றால் இந்த மாதிரி விழா எல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பார். ஆனால் ஒரு திட்டத்தோடு ஏற்பாடாகிக் கொண்டிருக்கும் இவ்விழாவினை யார் தடுப்பது?  80 வயது ஆகும் வரை நான்தான் தூத்துக்குடி பிஷப் என்று இவர் சொல்லிக்கொண்டு திரிகிறாராம். ஒருவேளை அதற்காகத்தான் இவ்விழாவோ? யாருக்குத் தெரியும்?. கால்வருடிகளுக்கும் தூபம் போடுபவர்களுக்கும்தான் உண்மை தெரியும். இவரை நல்லவர் என்று சொல்பவர்களை நாம் எந்த லிஸ்டில் வைப்பது. உன் நண்பன் யாரெனச் சொல் நான் உன்னை யாரெனச் சொல்கிறேன் என்ற வாக்கியம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. புனித மதர் தெரசாவுக்கு விழா எடுக்கவில்லையே!!! இறந்த பிறகு அல்லவா விழா எடுக்கிறார்கள்!!

Corporate ManagerPromotion orderEsacki letterஇவ்விழா அர்த்தமற்ற கிறிஸ்தவ வாழ்விற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமையும். மேலும் இவ்விழாவினை எடுக்கும் பாதிரியார்களையோ அல்லது ஆசிரியர்களையோ இவர் கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் பிஷப் இவான் தனது மேனேஜர் ஆஃப் ஆர்.சி ஸ்கூல்ஸ், தூத்துக்குடி மறைமாவட்டம் என்ற பதவியினை மாற்றி கார்பரேட் மேனேஜர் ஆர்.சி பள்ளிகள் தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்று மாற்றியிருக்கிறார். இதை இசக்கியை தவிர எந்த பாதிரியாருக்காவது, தலைமை ஆசிரியருக்காவது, ஆசிரியருக்காவது  அப்பிஷியலாக தெரியப்படுத்தியுள்ளாரா என்றால் இல்லை. இதுதான் அராஜகம் என்பது. சித்தன் போக்கு சிவன் போக்கு மாதிரி செயல்படுகிறார். இதை ஏன் மாற்றினார் என்பதுதான் ரகசியம். லட்டர் பேடு மாற்றப்பட்டுள்ளது என்ற விவரம் எத்தனை பாதிரியார்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியும்? எளிதில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய ஆர்டர்கள், சுற்றறிக்கைகளை பார்த்தால் வித்தியாசம் தெரியும். இவர் கார்பரேட் மேனேஜராக ஆகியிருப்பது பாதிரியார்களுக்கும் பள்ளிகளுக்கும்தான் தெரியாது என்று நினைக்காதீர்கள். கல்வித்துறைக்கும் தெரியாது. இது ஒரு உதாரணம்தான். எத்தனை பொய்கள் சொல்லி வருகிறார் என்பது ஆவே மரியாவுக்கு தெரியும். இவரது பொய்களுக்கு நூற்றுக் கணக்கான் ஆதாரங்கள் உள்ளன. மேனேஜ்மெண்டே மாறிட்டுங்கோ!!!

இப்படி இரகசியமாக முடிவுகள் எடுத்து சட்டவிரோதங்கள் செய்து பித்தலாட்டம் செய்யும் இந்த  பிஷப் இவானுக்கு ஒரு பொய்யான விழா எடுக்க வேண்டுமா? பாதிரியார்கள் சற்று சிந்திக்கலாமே!!!

ஒருவேளை இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளுக்கேற்ற வகையில் தீமை மட்டுமே செய்துள்ள இவான் வெட்கப்பட வேண்டும், நாணி தலை குனிய வேண்டும் என்ற நோக்கில் இவ்விழாவினை நடத்தி கூட இருக்கிற பாதிரியார்களே தண்டிக்க நினைக்கிறார்களோ?

அல்லது எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல என்ற அடிப்படையில் இந்த தீய பிஷப் இவான் அம்புடோஸுக்கு விழா எடுத்து கேவலப்படுத்த நினைக்கிறார்களோ?

பலரும் பல கோணங்களில் சிந்தித்து புலம்புகிறார்கள்.