திரை மறைவில் பாதிரியார் டொமினிக்

பாதிரியார் டொமினிக் திரை மறைவில் இருந்து கொண்டு தனது கையாட்களுடன் சேர்ந்து dominicதிசயன்விளை ஹோலி ரெடீமர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் திரு. நிக்சன் ஆசிரியருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை கெடுத்து நீதி மன்ற ஆணை மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் ஆணையையும் மீறி சேர்மாதேவி கல்வி மாவட்ட அலுவலரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சதிகாரக்கூட்டத்தை கையில் எடுத்து ஆங்கில முதுகலை ஆசிரியை திருமதி எஸ்தர் என்பார் காலமானதால் ஏற்பட்ட காலிப்பணியிடத்தில் செல்வி மிக்கேல் ஜொஸ்பின் என்பாரை வெளிச் சந்தையில் இருந்து ஃப்ரெஷ் ஆக மேலாளர் வழியாக நியமனம் செய்தார். நியமன ஆணை இதோ. Appointment order of Miss Josephine Michael இப்பள்ளியில் பி.டி ஆசிரியராக பணிபுரியும் திரு நிக்சன் என்பார் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். அன்னார் அப்பணியிடத்தில் பதவி உயர்வு பெற முழு தகுதி உள்ளவர். எனவே பாதிக்கப்பட்ட இவர் நீதி மன்றத்தில் தனக்குதான் அப்பணியிடம் கொடுக்கப்படவேண்டும் என்று ரிட் மனு 3230/2014 என்ற வழக்கு தொடர்ந்தார். நீதி மன்றம் திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலருக்கு தக்க ஆணை பிறப்பிக்க உத்தரவிட்டது. தான் நியமித்த நபருக்கே ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடனே மேலாளர் இவான் அம்புரோஸ் முதன்மை கல்வி அலுவலருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் இதோ Manager’s letter to CEO page 1 Manager’s letter to CEO page 2 ஆனால் திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் தனது ஆணையில் மேற்படி நிக்சன் என்பாருக்கு அப்பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிட்டார். அவ்வாணை இதோ CEO’s letter page 1 CEO’s letter page 2 அவ்வாணை 02.06.2014ல் கையெழுத்தானது பாதிரியார் டொமினிக் காதுக்கு வருகிறது. உடனே காது முறுக்கி விட்ட குதிரை போல செயல்பட ஆரம்பித்தார். தலைமை ஆசிரியரை முடுக்கி விட்டு 04.06.2014 அன்றே செல்வி மிக்கேல் ஜொஸ்பின்  என்பாரின் நியமன ஒப்புதலுக்கான கருத்துரு சேர்மாதேவி கல்வி மாவட்டத்திற்கு பறந்தது. பாதிரியார் டொமினிக்கின் கூட்டாளிகள் ஒன்று செர்ந்தனர். பண பரிவர்த்தனைகள் நடந்ததாக தெரிகிறது. சம்மந்தப்பட்ட இளநிலை உதவியாளர், கண்காணிப்பாளர், நேர்முக உதவியாளர் மற்றும் பொறுப்பில் இருந்த மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் தீவிர சிகிச்சை தொடங்கியது. அவசர அவசரமாக பாதிரியார் டொமினிக்கிடம் 13.06.2014 தேதியிட்டு உறுதிமொழி என்று தலைப்பிட்ட ஒரு கடிதம் கோப்பில் ஊடுறுவியுள்ளது. அது எப்படி அக்கோப்புக்கு சென்றது என்பது புதிராய் உள்ளது. பாதிரியார் டொமினிக் ஆர்வ மிகுதியில் உறுதிமொழி என தொடங்கி கடிதமாக அதை கொடுத்திருப்பதும் டொமினிக் அருள் வளன் என்று கண்காணிப்பாளர் நியமனம் பெற்ற அவர் டொமினிக் என்ற பெயர் மட்டும் எழுதி டொம் என்று கையெழுத்திட்டு கொடுத்திருப்பதும் வியப்பாகவும் வினோதமாகவும் உள்ளது. இவ்வளவு கதையும் தாளாளருக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்பதும் தெரியவருகிறது. சாதாரணமாக நீதிமன்றம் அல்லது அரசுதான் டிக்ளரேஷன் வெளியிடும். ஆனால் 04.01.2014 தேதியிட்டு பாதிரியார் டொமினிக் ஏதோ ஒரு பெரிய நீதிபதிபோல மேற்படி பள்ளி மைனாரிட்டி பள்ளி என்று தானே விளம்புகை செய்துகொண்டார். அதை தலைமை ஆசிரியர் அட்டெஸ்ட் வேறு செய்து கொடுத்துள்ளார். யார் யார்தான் டிக்ளரேஷன் கொடுக்கணும்னு வெவஸ்த இல்லாம் பொயிட்டுன்னு ஆசிரியர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

13.06.2014ல் குறிப்பு எழுதி சிறுபான்மை பள்ளி என்று பல இடங்களில் பாட்டு பாடி ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் 16.06.2014ல் கையெழுத்தாகியது. அலுவலக குறிப்பில் இருந்து ஒப்புதல் வரை உள்ள சரித்திர நாவல் இதோ Office Remarks 1 Office Remarks 2 Office Remarks 3 Office Remarks 4 Office Remarks 5 DEO’s approval ஒரு வழியாக 16.06.2014ல் திரு வைகுண்ட ராமன் என்ற மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஒப்புதல் ஆணையில்  கையெழுத்திட்டுவிட்டார். அவர் கூட மைனாரிட்டி என்ற அதே பல்லவிதான் பாடியுள்ளார். அவரவர் பெற்ற சன்மானத்திற்கு தங்களது வார்த்தைகளால் கோப்பில் வாலசைத்துள்ளது தெளிவாக தெரிகிறது. அனால் அதிசயம் ஒன்றும் நடந்ததுள்ளது!!!. மேற்படி ஆசிரியைக்கு நியமன ஒப்புதலை 13.06.2014 என்ற தேதியிலேயே பாதிரியாரின் ஆதரவாளர்கள் ஆர்வ மிகுதியில் மாவட்ட கல்வி அலுவலரின் கையெழுத்து வாங்கி கொடுத்து விட்டார்கள்.   இதற்கெல்லாம் காரணம் திரைமறைவில் இருந்த ஒன் மேன் ஆர்மி என்று தன்னை பெருமையாக கூறிக்கொள்ளும் பாதிரியார் டொமினிக்தான் என்பது தெரிய வந்துள்ளது. 13.06.2014ல் கையெழுத்தான ஒப்புதல் ஆணை இதோ Approval dated 13.06.2014 இரண்டு ஆணைகளும் வேறுபட்டிருப்பதை கூட பார்க்கலாம்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் மனாரிட்டி பள்ளி என்று மேற்படி செல்வி மிக்கேல் ஜோஸ்பின் நியமனத்திற்கு 13.06.2014ல் ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டு 9 மாதங்கள் கழித்து 26.03.2015ல் மேற்படி மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியின் கண்காணிப்பாளர், செல்வி மிக்கேல் ஜொஸ்பின், தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளரிடம் பள்ளி மைனாரிட்டி பள்ளியா என்றும் அதன் ஆதாரத்தை அனுப்புமாறும் வேண்டியுள்ளார். அதுவும் அந்த மனாரிட்டி விவரம் எந்த பக்கத்தில் எந்த பாராவில் உள்ளது என்ற் விவரத்தையும் அப்பாவி போல கேட்டுள்ளார் . அக்கடிதம் இதோ DEO asks information from school about minority இதை வாசிக்கும் பொதுமக்களே! ஆசிரியர்களே! தயவு செய்து இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை வழங்கி உதவிடுக. எமது சங்கம் இது சார்பான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் கேட்டுள்ளது. அம்மனுவை மாவட்ட கல்வி அலுவலக பொது தகவல் அலுவலர் 10.09.2015ல் பெற்றுள்ளார். மனுவை வாசிக்க வேண்டுமா? இதோ 09.09.2015 நாளிட்ட தகவல் அறியும் மனு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *