தாளாளர் சகாய ராஜ் ராயனின் தாண்டவம்

சொக்கன்குடியிருப்பு மணல் மாதா மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் திரு. ஜெயசிங் குருஸ் ஆஞ்சலஸ். இவர் கணித பாடம் நடத்துவதிலும் ஆங்கிலம் நடத்துவதிலும் திறமையானவர். அல்லும் பகலும் அயராது உழைப்பவர். கிராமத்து பள்ளியானாலும் அவரது பாணியில் பயிற்சி கொடுத்து மாணவர்களை அதிக மதிப்பெண்களை வாங்க வைப்பவர். கிராமப்புறத்து மாணவர்களுக்கென நடத்தப்படும் திறனாய்வுத் தேர்வில் இவரது பள்ளியில் இருந்து பல மாணவர்கள் வெற்றி பெற்று இன்றளவும் பலன் பெற்று வருகின்றனர். சிறிது கண்டிப்பானவர். தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தி பாடங்களில் குறைவான தேர்ச்சி அடையும் மாணவர்களையும் தேர்ச்சி பெற வைப்பவர். தன் கையிலிருந்து பணம் செலவழித்து பல மாணவர்களுக்கு உதவி செய்பவர். இவரது பள்ளியில் ஆறு முதல் பத்து வகுப்புகளுக்குதான் அரசின் நிதி உதவி கிடைக்கிறது. மேல்நிலை வகுப்புகளுக்கு அரசின் நிதி உதவி கிடையாது. இருப்பினும் நல்ல தேர்ச்சி விகிதங்களை கொணர்பவர். பல ஆண்டுகளாக அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் இப்பள்ளிக்கு அங்கீகாரம் புதுப்பிக்க முயன்று வருகிரார் என்பது தெரிய வருகிறது. பாதிரியார் சகாய ராஜ் ராயன் என்பார்தான் இப்பள்ளியின் தாளாளர். இச்சூழலில்  தலைமை ஆசிரியரின் அனுமதி இன்றி உதவி ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்று வந்துள்ளார். இதற்கு உடந்தையாக தாளாளர் இருந்துள்ளதாக தெரிகிறது. அனுமதி இன்றி இவ்வாறு மாணவர்களை அழைத்து சுற்றுலா செலவது தவறு என தலைமை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். அதை தாளாளர் தவறாக எடுத்துக் கொண்டுள்ளார். விஷயம் புகைய ஆரம்பித்திருக்கிறது. தாளாளர் அவ்வூரில் கோயிலில் பூஜை செய்யும் நபராகவும் இருப்பதால் ஊரை தூண்டுவதற்கும் மாணவர்களிடம் பேசுவதற்கும் பல சந்தர்ப்பங்கள் உண்டு. தனது அதிகாரத்தை துர்பிரயோகம் செய்து ஆசிரியையின் உதவியுடனும் தனக்கு வேண்டிய பெண்களின் உதவியுடனும் சில மாணவிகளிடம் இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் அவசர அவசரமாக எழுதி வாங்கி ஏற்கனவெ இவ்வூரில் பாதிரியாராக இருந்து தற்போது கண்காணிப்பாளராக இருக்கும் இசக்கி என்ற டொமினிக் என்பாரிடம் கொடுத்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டியிருக்கிறார். இசக்கி என்ற டொமினிக்குக்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பொழுது போக்கு. உடனே அவரும் சம்மதித்திருக்கிறார். அவருக்கு மேலதிகாரியான மேலாளர் இவான் அம்புரோஸ் இசக்கி என்பார் நீட்டும் எந்த பேப்பரிலும் கையெழுத்திடும் பழக்கம் உள்ளவர். அவர் உடனே சஸ்பெண்ட் செய்து ஆணையிட்டுள்ளார். மனித நேயமுள்ள ஒரு நல்ல மேலாளர் சஸ்பெண்ட் செய்யுமுன் சம்மந்தப்பட்டவரை அழைத்து அவரது கருத்துக்களை கேட்டு உண்மை நிலவரத்தை அறிந்து அதன்பின் தேவைப்படின் நடவடிக்கை எடுப்பார். ஆனால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு எந்த சந்தர்ப்பமும் கொடுக்காமல் எடுத்தேன் கவுத்தேன் என்று சஸ்பெண்ட் செய்து அதில் இன்பம் காண வந்துள்ளவர் டாக்டர் இவான் அம்புரோஸ். தமிழ் நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் 1973ன் படி தண்டனை கொடுக்குமுன் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி வேண்டும். அதை பின்பற்றாமல் இந்த சஸ்பெண்ட் விஷயம் நடந்துள்ளது. இப்பள்ளி மைனாரிட்டி பள்ளி அல்ல என்பதும் போலியான ஆவணங்களைக்காட்டிதான் இச்சலுகையை அனுபவித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. மேலும் இவருக்கு பிழைப்பூதியம் கொடுக்கப்படவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் 4 மாதங்களுக்கு மேல் ஒரு நபரை  தற்காலிக பணிநீக்கம் செய்யக்கூடாது என்பது விதி. ஆனால் இவ்வாசிரியரை 8 மாதங்கள் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்கள். ஆசிரியருக்கு கொடுக்க வேண்டிய ஆதாரங்கள் கொடுக்கப்படாததால் விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் தற்போது தற்காலிக பணிநீக்க ஆணையையும் தடை செய்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற ஆணையை இணைத்து முறைப்படி பள்ளியில் 22.09.2016 அன்று பணியில் சேர்ந்துள்ளார். இதை தாங்க முடியாமல் sahayaraj-rayanதாளாளர் சகாய ராஜ் ராயன் தனக்கு வேண்டிய ஆசிரியைகளை கையில் எடுத்துக் கொண்டு கைபேசி மூலம் தூண்டி விட்டு பள்ளியில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்பது தெரியவருகிறது. தாளாளர் சகாய ராஜ் ராயன் இப்போது பழையகாயலில் உள்ளார். அவர் இப்பள்ளிக்கு வருவதே கிடையாது. ஆனால் இவ்வாசிரியரை பழி வாங்க வேண்டும் என்பதற்காக மாறுதலாகி சென்ற பிறகும் தன்னிடமே பள்ளிப் பொறுப்பை வைத்துள்ளார். இதற்கு மேலாளர் அனுமதி வழங்கியுள்ளார். பாதிரியார் சகாய ராஜ் ராயன் இந்த அளவுக்கு மோசமான பழிவாங்கும் எண்ணம் உள்ளவர் என்பதை அறியும் போது இவர் ஒரு பாதிரியாரா? அதுவும் தினமும் “எங்களுக்கு தின்மை செயதவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும்” என்று பீடத்தில் நின்று கூறும் ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியாரா இவர் என்று எண்ணத்தோணுகிறது. கத்தோலிக்க பாதிரியார் பள்ளியில் குழந்தைகளை தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகிறார் என்பதை அறியும்போது கத்தோலிக்க மத போதனை மீது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படுகிறது. ஏன் கத்தோலிக்கர்கள் பிற சபைகளுக்கு செல்கிறார்கள் என்பதற்கு இப்போதுதான் காரணம் தெரிகிறது. எப்போதுமே நீதிமன்றங்களை மதிக்காத டாக்டர் இவான் அம்புரோஸின் உதவியாளர்கள் எப்படி இருப்பார்கள்? அவரைப்போலத்தான் இருப்பார்கள்.!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *