80 லட்சம் ரூபாய்


80 Lakhsபிஷப் இவான் அம்புரோஸ் 04.06.2016ல் ஒரு கடிதம் தயார் செய்து பாதிரியார் ரூபர்ட்டுக்கு கொடுத்துள்ளார். அக்கடிதத்தில் 14.10.2015 அன்று தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்ற சொசைட்டியின் Governing Body Meeting நடந்ததாகவும் அதில் டயோசிசன் டெப்பாசிட்டை pledge செய்து 80 லட்ச ரூபாயை வங்கியில் கடனாக பெற்று சாத்தான்குளத்தில் மேரி இம்மாகுலேட் பள்ளி ஆரம்பிப்பதற்கு கொடுப்பதாகவும் ஒரு சான்று வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்றை இங்கு பிரசுரிக்கிறோம். பிஷப் இவானின் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது உண்மைதானா என்பதை பாதிரியார்கள் சரிபார்க்கவும். ஏனெனில் மேரி இம்மாகுலேட் பள்ளிக்கான செலவுகளை புனித தோமையார் மெட்ரிக் பள்ளிதான் கொடுக்கிறது என்பதாக பலரும் பேசிக்கொள்கிறார்கள்.  பிரித்தாளும் கொள்கையை கையாளும் வந்திக்கத்தக்க பிஷப் இவான் அம்புரோஸ் இதிலும் ஏதாவது ஏடாகுடம் பண்ணியிருப்பார் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.


No comments yet. Be the first.

Leave a reply