சட்டவிரோதங்களுக்கு ஆதாரங்கள்

ஆவே மரியா பல்வேறு ஆவணங்களை வெளியிட்டுள்ளது. தற்போது இப்பக்கத்தில் வீடியோ க்ளிப் மூலம் சட்டவிரோதங்கள் வெளியிடப்படுகின்றன. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசை பிஷப் இவான் அம்புரோஸ் எவ்வாறு ஏமாற்றுகிறார் என்பதும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்காத நிலையையும் இந்த வீடியோ க்ளிப் எடுத்துரைக்கிறது. அரசை நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் சில பள்ளிகளுக்கு மைனாரிட்டி உரிமை இருக்கிறதா என கேட்டு அது சார்பான சரியான ஆவணங்களை சமர்ப்பித்தால்தான் மான்ய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவித்தார். ஆனால் இசக்கி என்ற டொமினிக் (பாதிரியார்) தானாகவே ஒரு வெள்ளைத்தாளில் மைனாரிட்டி உரிமை வாங்கியதாக டிக்ளரேஷன் கொடுத்து அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மாவட்ட கல்வி அலுவலர் சட்டப்பூர்வமாக செயல்படவில்லை. அரசு நடவடிக்கை எடுத்திடவேண்டும்.

மைனாரிட்டி உரிமை சார்பாக ஆயர் இவான் அம்புரோஸ் சுப்ரீம் கோர்ட்டில் பொய் கூறியுள்ளதற்கு ஆதாரம் இங்கு காணலாம்.

“The Roman Catholic Diocese of Tuticorin” என்ற பெயரில் சீராய்வு மனு 139/2007 ரகசியமாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இதன் வாதவுரை மற்றும் எதிர்வாதவுரை நகல் அரசிடமும் கல்வித்துறையினிடமும் இல்லை. Cause Title தவறாக குறிப்பிட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்த வழக்கின் அடிப்படையில் வெளியான அரசாணை 17 நாள் 19.01.2009 ரத்து செய்யப்படவேண்டும். அது சார்பான வீடியோ க்ளிப் இதோ.

ஆயர்கள் தூத்துக்குடியில் பொறுப்பேற்றதும் அவர்கள்தான் ஆர்.சி.பள்ளிகளின் மேலாளர் என்று The Tuticorin Diocesan Association என்ற NGOவின் Procurator & Secretary என்ற பதவியில் இருப்பவர் நியமன ஆணை பிறப்பித்து பிரகடனப்படுத்துகிறார். ஆனால் அதன் நகல்கள் தாளாளர்களுக்கும் தலைமை ஆசிரியார்களுக்கும் அனுப்பப்படுவதில்லை. எவ்வாறு ஆயர்தான் மேலாளர் என்பது பள்ளிகளுக்கு தெரியும்? மேலும் மேற்கண்ட  NGO தான் அப்ப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுக்கிறது. ஆனால் நியமன ஆணையில் நைசாக The Roman Catholic Schools of Tuticorin என்று சேர்த்துக்கொள்வது சகஜம். மேலும் தீர்மான நகல் அனுப்புவது கிடையாது. கல்வித்துறை டயோசிஸ், டயோசிஸ் என்று பெரிதாக நினைத்துக்கொண்டு மைனாரிட்டி உரிமை வாங்காது உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த நிர்வாகத்திற்கு நிறையவே மதிப்பு கொடுக்கிறது. அரசிடம் சம்பளம் வாங்கும் கல்வித்துறை அதிகாரிகள் யாரோ சொன்ன மைனாரிட்டி உர்மையை பெரிதாக நினைக்கிறது. ஆசிரியார்களை சட்டவிரோதம் செய்யும் நிர்வாகத்தோடு சேர்ந்து கொண்டு விரட்டுகிறது. இது நியாயமா?