பிஷப் இவானின் சட்டவிரோதமும் அரசின் நிதிச்சுமையும்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பொத்தக்காலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் வரலாறு முதுகலை ஆசிரியராக பணிபுரிந்த திரு.எஸ்.பீற்றர் ராஜ் ஆசிரியர், பாதிரியார் சேவியர் அருள் ராஜ் என்பாரின் சட்டவிரோதமான நடவடிக்கையினால் 24.08.1998 முதல் பணிநீக்கம் செய்யப்பட்டார். பணிநீக்கம் செய்யப்பட்ட அன்றே அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த திரு. ஜெயசீலன் அந்தொனிராஜ் என்பார் திரு.எஸ்.பீற்றர் ராஜ் ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்டார். அதே தேதியில் திரு.எஸ்.பீற்றர் ராஜ் ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் 24.08.2018 முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்  என்று தாளாளர் சேவியர் அருள் ராஜ் பதிவு செய்துள்ளார். பணிநீக்க ஆணையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் (ரிட் மனு 14632/98) வெற்றி நிச்சயம் கிட்டும் என்பதால் தனது பணியிடத்தில் செய்யப்பட்ட நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டாம் என உத்தரவு வேண்டி 22211/98 என்ற வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் 22.09.98ல் Any Appointment will be subject to the result of the writ petition என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. Order in WMP 22211 of 1998 தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் அப்போது பணிபுரிந்த திருவாளர் சேவியர் லியோனிதாஸ் என்பவரின் மறைமுக தூண்டுதலின் பேரில் அலுவலக பணியாளர்கள் இருதடவைகள் பணிநீக்கத்திற்கான மேலொப்பத்திற்கு திரு.எஸ்.பீற்றர் ராஜ் ஆசிரியரின் பணிப்பதிவேட்டில்  பதிவு செய்து மாவட்ட கல்வி அலுவலரின் மேலொப்பம் பெற முயற்சிகள் செய்துள்ளனர். ஆனால் சட்டவிரோத பதிவு என்பதால் இருதடவைகளும் மாவட்ட கல்வி அலுவலர் கையொப்பமிடாது கோடிட்டு இரத்து செய்துள்ளார்.  பணிப்பதிவேட்டில் டிஸ்மிசல் சார்பான பதிவு  தெளிவான க்ளீன் காப்பி Clean Copy of entries made in Service Register for Dismissal பின்னர் நீதிமன்ற ஆணையை புறக்கணித்துவிட்டு பாதிரியார் சேவியர் அருள் ராஜிடம் பேருக்கு 10 ரூபாய் பத்திரத்தில் உறுதிமொழியை எழுதி வாங்கிக் கொண்டு ரிட் மனு 14632/98வின் இறுதி முடிவிற்கு உட்படவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் திரு ஜெயசீலன் அந்தோனி ராஜ் என்பாரின் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். Approval and undertaking. பணிப்பதிவேட்டில் உள்ள ஒப்புதலின் க்ளீன் காப்பி Mr. Jeyaseelan Antony Raj – Conditional Approval given in Service Register அன்னாரின் நியமன ஆணையிலும் அதே நிபந்தனையை எழுதி மாவட்ட கல்வி அலுவலர் மேலோப்பமிட்டுள்ளார் Appointment order and approval. க்ளீன் காப்பி Clean copy of approval given in the Appointment order 24.08.1998லிருந்து அன்னார் எல்லா பண பலன்களையும் அரசிடமிருந்து பெற்றுவந்தார். நிபந்தனையின் பேரில் வழங்கப்பட்ட நியமன ஒப்புதலை மறைத்து அன்னாருக்கு சிறப்புநிலை கூட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் திரு. ஜெயசீலன் அந்தோனிராஜ் என்பார் 31.05.2018ல் ஓய்வு பெறும் நிலை வந்தது. சம்மந்தப்பட்ட பள்ளி இளநிலை உதவியாளர் திரு.அந்தோனி ஜெயராஜ் என்பாரும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில்  பிரிவு ஆ4ல் பணியாற்றிய திருமதி கோகிலா என்பாரும் அப்போது பொறுப்பில் இருந்த மாவட்ட கல்வி அலுவலர் திருமதி செந்தூர்கனி என்பாருடன் சேர்ந்து கூட்டு சதி செய்து  ந.க.எண்.10326/ஆ3/98 நாள் 18.12.1998ல் நிபந்தனை அடிப்படையில் கொடுக்கப்பட்ட ஒப்புதலை மறைத்து அன்னாருக்கு ஓய்வூதிய ஆணை கொடுத்துள்ளனர்.  Pension Order. ஓய்வூதிய கருத்துருவில் கையெழுத்திட்டுள்ள தாளாளர் பாதிரியார் ஜோசப் ரவிபாலன் அவர்களுக்கு நிபந்தனையின் பேரில் கொடுக்கப்பட்ட  மேற்படி ஒப்புதல் விவரத்தினை இளநிலை உதவியாளர் திரு அந்தோனி ஜெயராஜ் சொல்லவில்லை என்று கருதப்படுகிறது.  இத்தருணத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 12.03.2018 அன்று மேற்படி ரிட் மனு 14632/98ன் தொடர் வழக்குகளான் சிவில் அப்பீல் 1868-69/2014 என்ற வழக்குகளில் ஆணை பிறப்பித்தது. திரு.எஸ்.பீற்றர் ராஜ் ஆசிரியருக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட நாளான 24.08.1998 முதல் பணி ஓய்வு நாளான 30.06.2014 வரை ஊதியம் மற்றும் பணிக்காலம் கணக்கிட்டு 15% Back-wageம் அனைத்து ஓய்வூதிய பலன்களும் கொடுக்க வேண்டும் என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் 12.03.2018 அன்று மேற்படி ஆணையில் தெரிவித்தது. SC order dated 12.03.2018. திரு. எஸ். பீற்றர் ராஜ் ஆசிரியர் உடனடியாக அரசின் நிதிச்சுமையை நிறுத்தவும் ஏற்கனவே அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்யவும் உச்ச நீதிமன்ற ஆணையை இணைத்து 17.03.2018 நாளிட்ட மனுவினை மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி திரு ஜெயசீலன் அந்தோனி ராஜ் என்பாருக்கு ஊதியம் வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படியும் அதுவரை அன்னாருக்காக அரசை ஏமாற்றி வாங்கின சம்பளம் அனைத்தையும் கருவூலத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் வேண்டினார் Representation dated 17.03.2018. அதே நேரத்தில் 28.03.2018 நாளிட்ட கடிதம் மூலம் வந்திக்கத்தக்க இவான் அம்புரோஸ் 15% ஊதியம் கணக்கிட்டு ஆசிரியர் திரு பீற்றர் ராஜுக்கு அனுப்பினார். ஆனால் திட்டமிட்டபடி 31.05.2018 வரை மேற்படி ஆசிரியர் ஜெயசீலன் அந்தோனி ராஜ் என்பாருக்கு ஊதியம் பெற்றுக் கொடுப்பதற்காகவும் பென்ஷன் வாங்கி கொடுப்பதற்காகவும் எனது ஓய்வூதிய கருத்துருவை அனுப்பாமல் இழுத்தடித்தார். பாதிரியார் சேவியர் அருள் ராஜ் ரூபாய் 10 மதிப்புள்ள முத்திரை தாளில் கொடுத்த உறுதிமொழிப்படி நோக்கினால் கொடுக்கப்பட்ட ஒப்புதல் இரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.  மாவட்ட கல்வி அலுவலர் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆசிரியர் திரு.பீற்றர் ராஜ் உடனே ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் Notice dated 07.04.2018. அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் திரு எஸ் பீற்றர் ராஜ் ஆசிரியர் ரிட் மனு 11121/2018ஐ தாக்கல் செய்து,  தவறான முறையில் அரசை ஏமாற்றி பொது மக்களின் பணத்தை முறைகேடு செய்து திரு ஜெயசீலன் அந்தோனி ராஜ் என்பாருக்கு பெற்றுக் கொடுத்த பணத்தை பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் ந.க.எண் 10326/அ3/98 நாள் 18.12.1998 என்ற செயல்முறைகளில் மாவட்ட கல்வி அலுவலர் திரு ஜெயசீலன் அந்தோனி ராஜ் என்பாரின் நியமனத்திற்கு நிபந்தனை அடிப்படையில் அளித்த ஒப்புதலை இரத்து செய்ய வேண்டும் என்றும் வேண்டியுள்ளார். இவ்வழக்கு 16.05.2018 அன்று விசாரணைக்கு வந்தது. பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இவ்வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது WP 11121 of 2018. உச்ச நீதிமன்ற ஆணைப்படி நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆசிரியர் திரு. எஸ்.பீற்றர் ராஜ் ரிட் மனு 11709/2018 தாக்கல் செய்து உச்ச நீதிமன்ற ஆணைப்படி தனக்கு ஓய்வூதிய பலன்கள் கொடுக்கப்படவில்லை என்றும் தனக்கு நிவாரணம் வேண்டும் என்றும் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் 31.05.2018 தேதியிட்ட ஆணையில் ஆணை நகல் கிடைத்த 4 வார காலத்திற்குள் ஓய்வூதிய கருத்துருவினை மாவட்ட கல்வி அலுவலருக்கும்  மாநில தலைமை கணக்காயருக்கும் அனுப்பிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது Court order dated 31.05.2018. அதன்படி திரு எஸ். பீற்றர் ராஜ் ஆசிரியரின் பணிக்காலமும் ஊதியங்களும் முறைப்படுத்தப்பட்டு மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதற்கிடையில் திரு ஜெயசீலன் அந்தோனி ராஜ் ரிட் மனு 16151/2018ஐ தாக்கல் செய்து தனக்கு ஓய்வூதியம் வேண்டும் என பிரார்த்தித்தார். வழக்கு 25.07.2018ல் விசாரணைக்கு வந்தது. பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இவ்வழக்கும் நிலுவையிலுள்ளது WP 16151 of 2018. அரசிடமிருந்து பெற்ற மான்யத்தை தக்க வைக்க வேண்டும் என்றும் நிர்வாகத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் மறைமுகமாக நிர்வாகத்தினரால் தூண்டப்பட்டு மேற்படி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. அன்னாருக்கும் ஓய்வூதியம் கொடுக்கப்பட்டால் ஒரு பணியிடத்திற்கு 2 பேர் ஓய்வூதியம் பெறும் அவலமும் சட்ட விரோதமும் ஏற்படும். மேற்படி டிஸ்மிஸல் வழக்கில் தொடுக்கப்பட்ட வழக்குகளான ரிட் 14632/98, 3427/2006, 1421/2012, ரிட் அப்பீல் 223/2013 மற்றும் சீராய்வு மனு 50/2013 ஆகிய அனைத்திலும் திரு பீற்றர் ராஜ் ஆசிரியர் வெற்றி பெற்ற போதும் பிஷப் இவான் அம்புரோஸ் மீண்டும் மீண்டும் பணத்தை வாரி இறைத்து வழக்குகள் தொடர்ந்தார். பாதிரியார்கள் கேட்டதற்கு தனக்கு டில்லியில் அநேகரை தெரியும் என்றும், தான் உலகளவில் பிரசித்தி பெற்றவர் என்றும் ஆசிரியர் திரு.பீற்றர் ராஜை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன் என்றும் கூறி வீணாக வழக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக தொடுத்துக் கொண்டே சென்றார். அதன் விளைவு? – நிர்வாகம் பிறப்பித்த தவறான ஆணையால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டு விரையம் செய்யப்பட்டுள்ளது. அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுத்து தவறாக ஏமாற்றி பெற்ற மான்யத்தை பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து திரும்ப பெற வேண்டும். அனைத்து வழக்குகளிலும் ஆசிரியர் வெற்றி பெற்றார். ஆனாலும் பிஷப் இவான் அம்புரோஸின் வெறி அடங்கவில்லை. இவ்வழக்கில் ஆசிரியர் வெற்றி பெற்ற பிறகு 2013ல் பரிமாரப்பட்ட சில கடிதங்களை இங்கு வாசிக்கலாம். Letter of Correspondent dated 05.06.2013Letter of Esacki dated 24.06.2013Letter of DEO dated 04.07.2013 திரு ஜெயசீலன் அந்தோனி ராஜ் என்பாருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனையின் பேரிலான ஒப்புதலை சிறிதும் பொருட்படுத்தாது நீதிமன்ற ஆணையை அவமதித்து அரசிடம் மேற்படி ஆசிரியருக்காக சட்டவிரோதமாக பெற்ற அனைத்து பணபலன்களும் சேவியர் அருள் ராஜிடமிருந்தும் பிஷப் இவான் அம்புரோஸிடமிருந்தும் வசூலித்து கருவூலத்தில் கட்டவேண்டும். அல்லது  பிஷப் இவான் மற்றும் சேவியர் அருள்ராஜ் ஆகிய இருவரும் செய்த தவறுக்காகவும் சட்டவிரோதத்திற்காகவும்  பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்று மேற்படி பணத்தை அரசு கருவூலத்தில் திரும்ப செலுத்த வேண்டும். ஏமாற்றியவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத மைனாரிட்டி உரிமையின் பேரில் எத்தனையோ ஆசிரியர்களை பிஷப் இவான் அம்புரோஸ் கொடுமைப்படுத்தி வருகிறார். ஆசிரியர்களிடம் இருந்து மாதந்தோறும் பணம் வாங்கி அப்பணத்தையே ஆசிரியர்களுக்கு எதிராக செலவழிக்கும் பிஷப் இவான் அம்புரோஸ் மீதும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *