Tuticorin Diocesan Association
In this page we would like to publish some important documents so that teachers in the minority schools may understand how the managements are involving in illegalities and how the education department is supporting them blindly. The following is the document which is a notice served to 9 respondents under section 80 CPC. Notice under Section 80CPC
The following are not registered bodies. Miss Kalyani got this information from the District Regsitrar of Thoothukudi.
1. R.C.Schools, Thoothukudi 2.R.C.Mission Thoothukudi 3.R.C.Church, Thoothukudi 4. Catholic Diocese of Thoothukudi and 5. Diocese of Thoothukudi. இதோ ஆதாரங்கள். Kalyani’s RTI Petition and reply
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நிர்வாகம் அனைத்து கடிதங்கள், நியமன ஆணைகள், கருத்துருக்களை இந்த பெயரில்தான் அரசுக்கு அனுப்புகிறது. அவைகள் எந்த எதிர்ப்பும் இன்றி ஒப்புதல்கள் பெறுகின்றன. வங்கிகளில் கூட Superintendent of R.C.Schools, Thoothukudi என்று கணக்குகள் செயல்படுகின்றன. அக்கணக்குகளில் மாதாமாதம் பணம் குவிகிறது. அதை இப்போது அனுபவிப்பது மேற்படி பாதிரியார் டோமினிக்தான். மேலும் கருவூலங்கள் கூட பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்திற்கு ஒரு கண்காணிப்பாளர் இருப்பதை அனுமதித்து அன்னார் பெயரில் பண பரிவர்த்தனை செய்வதை அனுமதிக்கிறது.
மேலும் The Roman Catholic Diocese of Tuticorin என்ற ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லை. இதோ ஆதாரம். Registrar – RTI Petition District Registrar’s Letter
ஆனால் இல்லாத ஒரு கற்பனையான இந்த பெயரில் ரிட் மனு தாக்கல் செய்து 570/1975 என்ற மனுவில் 17.12.1975ல் மைனாரிட்டி உரிமை பெற்றுள்ளதாக நிர்வாகம் மட்டும் அல்ல தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர்கூட சொல்லுகிறார். கல்வி அதிகாரி சம்பளத்தை அரசிடம் வாங்குகிறார் ஆனால் விசுவாசத்தை இந்தப் போலியான நிர்வாகத்திடம் காட்டுகிறார். Minortiy_Status_WP_570_of_1975 பள்ளிக் கல்வி இயக்குநரிடம் இந்த ரிட் மனு எண். 570/75ன் அஃபிடவிட் நகல் கேட்கப்பட்டது. அது அந்த அலுவலகத்தில் இல்லை என பதில் வந்துள்ளது. மனுதாரர் யார் என இன்னும் தெரியாது. ஆனால் இந்த நிர்வாகம் தொடர்ந்து மனாரிட்டி உரிமையை அனுபவிக்கிறது. அரசியல் பலமும் பணபலமும்தான் காரணம் என்று பொதுமக்களிடையே கருத்து நிலவுகிறது. கேவலம், பணத்துக்காக சட்டத்தையே தூக்கி எறியும் அவலத்தை நாம் இங்கு காணலாம். கீழ்கண்ட ஆவணங்களை வாசிக்கவும். கிறிஸ்தவ பாதிரியார்கள் பொய் சொல்லத் தயங்க மாட்டார்கள் என்பதை நன்கு உணர முடிகிறது. WP 570 of 75 Affidavit being searched WP 570 of 75 Affidavit certificate from document section WP 570 of 75 Affidavit not available
அநேக பாதிரியார்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் The Tuticorin Diocesan Association என்று சொல்லப்படும் (Educational Agency) கல்வி முகமையின் memorandum and bylaw தெரியாது என்பதுதன் உண்மை. தலைமையாசிரியர்கள் நிர்வாகத்தின் பெயரை இஷ்டம்போல எழுதுகிறார்கள். கல்வித்துறை மைனாரிட்டி என்ற பெயரில் எதை எழுதினாலும் ஒப்புதல் அளிக்கும் போது இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?!!!
28.12.1993ல் பிஷப் அமலநாதர் காலத்தில்நிறைவேற்றப்பட்ட memorandum and bylaw இதோ!!!
Byelaws_of_The_Tuticorin_Diocesan_Association
இதற்கு முந்தைய bylaw and memorandum நகல் இதோ. Previous bylaws and memorandum இதைத்தான் கீழ்கண்ட ரிட் மனுக்களில் இணைத்துள்ளது இந்த தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன்.!!!
ரிட் மனு எண். (MD) 7587/2012 – Filed by
The Tuticorin Diocesan Association, Rep.by Rev.Fr.M.Jebanathan, Procurator & Chief Functionary
Catholic Bishop’s House, G.C.Road, Tuticorin-628 001
ரிட் மனு எண். (MD) 3061/2014 – Filed by
The Tuticorin Diocesan Association, Rep.by Rev.Fr.A.Sahaya Joseph, Procurator & Chief Functionary
Catholic Bishop’s House, G.C.Road, Tuticorin-628 001
எமது சங்கத்தில் இது சார்பான உண்மை நகல் உள்ளது. தேவைப்பட்டால் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவும்.
தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம்தான் மேற்படி நிர்வாகம் செய்யும் ஆனைத்து ஊழ்ல்களுக்கும் துணை போகும் ஒரு முக்கியமான அலுவலகம். 30 ஆண்டுகளுக்கு மேல் அங்கீகாரமும் நிதி உதவியும் மைனாரிட்டி உரிமை அடிப்படையில் கொடுத்துவரும் அலுவலகத்தில் 3 பள்ளிகளுக்கான முக்கியமான ஆவணங்கள் கேட்கப்பட்டன. தனது அலுவலகத்தில் இல்லை என்பதே தவறு. அதை 30 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகளில் கேட்பதும் அவைகளை பள்ளிகள் கொடுக்காது இருப்பதும் அடுத்த தவறு. வேடிக்கையான அலுவலக கடிதங்களை கீழே தருகிறோம்.
RTI Petition 02.01.2015 Page 1 RTI Petition 02.01.2015 Page 2 Sacred Heart HSS St.Joseph HSS St.Mary’s HSS
தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலருக்கு ஆவே மரியா செயலர் 23.10.2014ல் ஒரு மகஜர் அனுப்பி மேற்படி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார். அது தொடர்பான தகவல்களை க்ளிக் செய்து வாசிக்கவும். யார் என்ன செய்ய முடியும் என்ற தெனாவட்டில் இந்த நிர்வாகம் உள்ளது. மாவட்ட கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுக்காததால் தகவலறியும் சட்டம் வாயிலாக தகவல்கள் கேட்டதால் தொடர் நடவடிக்கை எடுக்க இப்போதுதான் நினைக்கிறது. இதோ கோரிக்கை மனு. Representation dated 23.10.2014 அதை தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை வாசிக்க இதோ Subsequent communications இதனைத் தொடர்ந்து நிர்வாகம் பதில் மாவட்டக் கல்வி அலுவலர்க்கு பதில் அனுப்பியுள்ளது. இப்பதிலின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க இயலும். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காது நிர்வாகம் அனுப்பிய பதிலை எமக்கு அனுப்பியுள்ளார். மொத்தம் 12 இனங்களில் கருத்துக்கள் உள்ளன. அதை வாசிக்க வேண்டுமா? இதோ Management’s Reply to petition dated 23.10.2014 and points to consider
ஆதாரங்கள் இன்னும் பல!!! தொடரும்….