மேலாளரின் நியமன ஆணையும் நியாயமான கேள்விகளும்

பிஷப் இவான் அம்புரோஸ் எவ்வாறு பள்ளிகளுக்கு மேலாளர் ஆனார் என்று பலர் கேட்கின்றனர். அவருடைய நியமன ஆணை நகலினை பல தடவைகள் கேட்ட பிறகு தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அனுப்பியுள்ளார். Bishopஅதை இங்கே பிரசுரிக்கிறோம். Bishop’s appointment order இதை வாசித்தாலே நிர்வாகத்தின் பெயர் தெரியும். Tuticorin Diocesan Association என்ற N.G.O தான் அதாவது Tuticorin Diocesan Association என்ற தொண்டு நிறுவன செயலர்தான் இவரை மேலாளர் என்று நியமித்திருப்பதற்கான தீர்மானத்தை அனுப்பி அதை மேலாளரின் நியமன ஆணையாக அனுப்பியுள்ளார். இது சார்பாக பொதுமக்கள் எழுப்பும் கேள்விகள்.

1. இந்த தொண்டு நிறுவனத்தில் (Tuticorin Diocesan Association) பாப்பாண்டவர் உறுப்பினர் இல்லை. அப்படி இருக்கும்போது அவருடைய ஆணையின் மூலம் டாக்டர் இவான் அம்புரோஸ் எவ்வாறு பள்ளிகளின் மேலாளராக முடியும்? பாப்பாண்டவர் தூத்துக்குடி டயோசிஸின் மேல் அதிகாரி. அவர் பிஷப்பை நியமிக்கலாம். ஆனால் அவரின் ஆணையின்படி பிஷப் இவான் அம்புரோஸ் எவ்வாறு பள்ளிகளுக்கு மேலாளராக ஆக முடியும்? தமிழ் நாடு சங்கப்பதிவு சட்டப்படி இயங்கும் Tuticorin Diocesan Association என்ற N.G.O-க்கும் பாப்பானவருக்கும் சட்டப்படி சம்மந்தம் இல்லை. 1923ல் உருவான மறைமாவட்டத்திற்கும் பாப்பானவருக்கும் சம்மந்தம் உண்டு என்பது உண்மை. டாக்டர் இவான் அம்புரோஸின் பள்ளி நிர்வாகம் மேற்கண்ட இரண்டையும் மிக்ஸ் பண்ணி குழப்பி கல்வி இலாக்காவின் அறியாமையை பயன்படுத்தி பல சட்டவிரோதங்களை செய்கிறது. இது சரியா என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.

2. Tuticorin Diocesan Association என்ற N.G.O தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் அதன் அடிப்படையில்தான் டாக்டர் இவான் அம்புரோஸ் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த தீர்மான நகல் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படவில்லை. அதன் காரணம் என்ன?

3. தீர்மான நகல் இல்லாமல் பாதிரியார் தியோபிலஸ்தான் செயலர் என்பது கல்வி இலாக்காவுக்கு எப்படி தெரியும்? எத்தனை உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள் யார் யார் உறுப்பினர்கள் என்பது யாருக்கு தெரியும்? பாதிரியார் தியோபிலஸ் செயலர் என்பதை கல்வி முகமை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளதா? இந்த விவரம் தெரியாமல் இருக்கும்போது அவர் கையெழுத்திட்டுள்ள நியமன ஆணை எவ்வாறு செல்லுபடியாகும்? கல்வி இலாகா ஏன் கண்மூடித்தனமாக டாக்டர் இவான் அம்புரோஸ் தலைவராக இருக்கும் கல்வி முகமையை நம்புகிறது?

4. தன்னை மேலாளராக நியமனம் செய்துள்ள மேற்கண்ட Tuticorin Diocesan Association என்ற தொண்டு நிறுவனத்தின் பெயரை தான் பிறப்பிக்கும் ஆணைகளில் குறிப்பிடாமல் வேறு பெயர்களை பிஷப் இவான் ஏன் குறிப்பிடுகிறார்?

5.  இதே டாக்டர் இவான் அம்புரோஸ் மத்திய அரசுக்கு அனுப்பும் கடிதங்களில் மட்டும் Tuticorin Diocesan Association என்ற N.G.O வின் பெயரை பயன்படுத்துகிறாரே அதன் காரணம் என்ன?

6. இந்த Tuticorin Diocesan Association என்ற தொண்டு நிறுவனம் ரிட் மனு 570/1975ல் ஒரு Partyயாக சேர்க்கப்பட்டுள்ளதா? இந்த பெயர் 17.12.1975ல் வெளியிட்ட நீதிமன்ற ஆணையிலோ 10.10.2012 நாளிட்ட ஆணையிலோ இல்லாதிருக்கும்போது இது மைனாரிட்டி நிறுவனம் என்பதற்கு எந்த ஆதாரம் உள்ளது?

7. மேற்படி நியமன ஆணையின் பொருளில் மைனாரிட்டி நிறுவனங்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அது பொய்யா? அது உண்மை என்றால் ஏன் மைனாரிட்டி ஆணை பெற்றதற்கான ஆதாரம் அடங்கிய ஆணைகளை குறிப்பிடவில்லை?

8. மேற்படி ஆணை மூலம் மேலாளர் என்ற பதவிக்கு வந்த டாகடர் இவான் அம்புரோஸ் எதற்காக தனது 09.03.2015 மற்றும் 23.06.2015 நாளிட்ட கடிதங்களில் Tuticorin Diocesan Association என்ற பெயரில் எங்களது நிறுவனத்தை பதிவு செய்துவிட்டு The Roman Catholic Diocese of Tuticorin என்ற பெயரில் செயல்படுகிறோம் என்று எழுதியுள்ளார்?

9. ஏன் பதிவு செய்த சட்டப்பூர்வமான நிறுவனத்தின் பெயரில் செயல்படாமல் வேறு பெயரில் செயல்படவேண்டும்? அதற்கான காரணம் என்ன? இதை கல்வித்துறை எந்த விதிகளின் அடிப்படையில் அனுமதிக்கிறது? கல்வித்துறை தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறதா? அல்லது அவ்வாறு இருக்க ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?

10. டாக்டர் இவான் அம்புரோஸ் அரசையும் மக்களையும் ஏமாற்றுவதற்குத்தான் ஆயர் பட்டம் பெற்றாரா?

11. டாக்டர் இவான் அம்புரோஸ் என்ன சொன்னாலும் அதை கல்வி இலாகா அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவேதும் பிறப்பித்துள்ளதா?

12. மேற்படி நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ள மேலாளரின் அதிகாரங்கள் எவை என்று கல்வி இலாக்காவுக்கோ மக்களுக்கோ அல்லது பள்ளிகளுக்கோ தெரியுமா?

13. பள்ளிகளுக்கு இதுவரை தனது நிர்வாகத்தின் பெயர், பதிவு விவரங்கள், மைனாரிட்டி உரிமை சார்பான ஆவணங்களை தெரியப்படுத்தியிருக்கிறாரா? அவ்வாறு தெரியப்படுத்தவில்லை என்றால் அதற்கு காரணம் என்ன? எதற்காக பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் உண்மைகளை மறைக்க வேண்டும்?

14. தற்சமயம் பதிமூன்று பேர் உறுப்பினர்களாக இருக்கும் இத்தொண்டு நிறுவனத்தை டாக்டர் இவான் அம்புரோஸ் 4.5 லட்சம் கத்தோலிக்க மக்கள் அடங்கிய தூத்துக்குடி டயோசிஸ் என்று எவ்வாறு கூற முடியும்? ஏன் அவ்வாறு கூறுகிறார்? மத்திய அரசு கேட்ட 32 கேள்விகளுக்கு பதில் அளித்த டாக்டர் இவான் 27 வது கேள்வியிலிருந்து 32வது கேள்வி வரை க்கு அளித்துள்ள பதிலை இங்கே ஆதாரமாக வைக்கின்றோம். யார் யார் Tuticorin Diocesan Association என்ற  N.G.O வில் உறுப்பினர்கள் என்பதை டாக்டர் இவான் அம்புரோஸ் கூறுகிறார் பாருங்கள். Bishop Yvon Ambroise’s answers Q 27 to Q 32

15. தான் ஊழலே செய்யவில்லை என்று கூறும் டாக்டர் இவான் அம்புரோஸ் இது விஷயத்தில் திறந்த மனதோடு அனைத்து ஆவணங்களையும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் கல்வி இலாக்காவுக்கும் பொது மக்களுக்கும்  தெரிவிப்பாரா?

16. இவர் திவ்ய நற்கருணையை தினமும் கையில் ஏந்தும்போது தான் கூறிய பொய்களும் அநீதிகளும் மனதில் தோன்றி உறுத்துமா? இல்லை உறுத்தாதா? இதை வாசித்த பிறகாவது உறுத்துமா?

17. டாக்டர் இவான் அம்புரோஸ் நிர்வாகம் ஊழல் நிறைந்தது என்பதை அறிந்த பிறகும் அரசு ஏன் இன்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்காதிருக்கிறது? அரசுக்கு இவர் செய்யும் ஊழல் புரியவில்லையா? அல்லது புரியாதது போல் பாசாங்கு செய்கிறதா?

விடைகள் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *