பிஷப் இவானும் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரும்

பிஷப் இவான் அம்புரோஸ் திடீரென தனது பதவியை கார்பரேட் மேனேஜர் என்று மாற்றிக் கொண்டார். தனது லெட்டர் பேடை மாற்றிக் கொண்டார். பள்ளிகளை நடத்துவது தி தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்பதாக லெட்டர் பேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இசக்கியும் பதவியை மாற்றிக் கொண்டார். பிஷப் 18.05.2005 லேயே மேனேஜர் ஆப் ஆர்.சி ஸ்கூல்ஸ் என்று நியமனம் பெற்றதாக 13.07.2016 அன்று இசக்கியிடம் ஒரு ஆர்டரை வாங்கி அதன் நகலினை தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் சங்க செயலர் திரு. பீட்டர் ராஜிடம் ஒப்படைத்தார். பிஷப் 28.09.2005ல் தான் தி தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்ற சொசைட்டியில் சேர்ந்துள்ளார். ஆனால் அவர் அந்த சொசைட்டிக்கு 18.05.2005லேயே எப்படி தலைவராக முடியும் என்ற கேள்வியை எழுப்பியவுடன் தானைத் தலைவர் வந்திக்கத்தக்க இவான் கீழ்கண்ட லெட்டரை ஆவே மரியா சங்கத்தின் செயலருக்கு எழுதினார். Bishop letter dated 28.12.2017 மனுஷன் உளறி கொட்டியிருக்கிறார். சாதாரணமாக பதில் தர மாட்டார். அவரு பப்ளிக் அதாரிட்டி இல்லையாம்!!! புத்திசாலி பிஷப்!!! இப்போ மட்டும் பதில் எப்படி கொடுத்தார் என்பது தெரியவில்லை. இவரு மட்டும்தான் புத்திசாலி என்ற நினைப்பு இவருக்கு.

சங்க செயலர் விடவில்லை. 2005ம் வருடம் முதல் கூட்டத்திலேயே எமது சங்கத்தை ஆவே மரியாவா? ஈவ் மரியாவா? என்று கிண்டல் அடித்த மேதாவி அல்லவா இவர். மேற்படி கடிதத்தை இணைத்து தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவலறியும் சட்டத்தின் கீழ் சில தகவல்களை வேண்டினார். RTI Petition to DEO on the basis of Bishop letter dated 28.12.2017

மேற்படி தகவலறியும் மனுவிற்கு தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பதில் தருவதற்கு பதிலாக அதிமேதாவி வந்திக்கத்தக்க இவானுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டு பதிலை தருமாறு மீண்டும் இந்த வந்திக்கத்தக்க இவான் அம்புரோஸ் பிஷப்புக்கே அனுப்பியுள்ளார். வேடிக்கை என்னவென்றால் மேற்படி பிஷப் இவான் தன்னை கார்பரேட் மேனேஜர் என்று சொல்லுகிறார். கல்வி முகமையை மாற்றி தி தூத்துக்குடி டயோசிசன் அசோசியேஷன் என்று சொல்லுகிறார். ஆனால் மாவட்ட கல்வி அலுவலர் எனக்கு தகவல் கொடுக்கும்படி மேலாளருக்கு அனுப்பின கடிதத்தில் மேலாளர், ஆர்.சி.பள்ளிகள், தூத்துக்குடி மறைமாவட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். என்ன ஒரு கோவாப்பரேஷன் பார்த்தீர்களா? மாவட்ட கல்வி அலுவலரின் கடிதம் இதோ Letter of Thoothukudi DEO in reply to RTI petition

இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் வழக்கமாக தகவலறியும் மனுவிற்கு பதில் எழுத மாவட்ட கல்வி அலுவலர் பிஷப் இவானுக்கு எழுதுவார். உடனே பிஷப் தகவலறியும் மனுவிற்கு தான் பப்ளிக் அதாரிட்டி இல்லாததால் பதில் தரவேண்டியதில்லை என்று பதில் கொடுப்பார். மாவட்ட கல்வி அலுவலர் புத்திசாலித்தனமாக அதையே தகவலறியும் மனுவிற்குப் பதில் என்று மனுதாரருக்கு அனுப்பிவிடுவார். இது கல்வித்துறையும் பிஷப்பும் நடத்தும் நாடகம். பிஷப் எழுதிய ஒரு கடிதம் பிரசுரிக்கப்படுகிறது. Bishop syas he is not a public authority ஆனால் வேற வழியில்லாமல் சங்க செயலருக்கு பத்தி 1ல் காணும் 28.12.2017 நாளிட்ட கடிதம் மூலம் தகவல் தந்துள்ளார். அதுவும் தவறான தகவல்கள். மாவட்ட கல்வி அலுவலகம் என்ன செய்கிறது என்பதே தெரியவில்லை. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் முதன்மை கல்வி அலுவலர்களையும் மாவட்ட கல்வி அலுவலர்களையும் மேதாவி பிஷப் இவான் அம்புரோஸ் உடனே விலைக்கு வாங்கிவிடுகிறார். அல்லது கீழ்காணும் கடிதத்தின் மூலம் இவான் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மேலதிகாரி ஆணையிட்ட பிறகும் முதன்மை கல்வி அலுவலரும் மாவட்ட கல்வி அலுவலரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பார்களா?  இப்படி நிறைய ஆதாரங்கள் எமது சங்கத்தில் உள்ளன.

JD letter to CEOJD lettet to DEO

இசக்கி தனது பதவியை மாற்றியுள்ளமைக்கு ஆதாரம் இதோ. Esacki’s letter as a proof that he has changed the eduactional agency and his post

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் முதன்மை கல்வி அலுவலர்களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் விவரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும்  ஊழல் இல்லாதவர்களாக இருக்கவேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு மெத்தப்படித்த மேதாவி பிஷப் இவான் அம்புஎரோஸுக்கும், தனது பெயரையே மாற்றிக் கொண்டு கண்காணிப்பாளராக செயல்படும் கிரிமினல் இசக்கிக்கும், வாலசைக்கும் அதிகாரிகள் தூத்துக்குடிக்கு வேண்டாம் என்று பொதுமக்களும் ஆசிரியர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் சீல் கண்ட இடத்தில் கையெழுத்திட்டுவிட்டு ஜீப்பில் ஜாலியாக ஊர் சுற்றும் சிலர்தான் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பில் உள்ளனர். இது அலுவலக ஊழலுக்கு வழிவகுக்கிறது. எடுத்துக் காட்டாக திரு நரசிம்மன், திருமதி செந்தூர்கனி மற்றும் திருமதி கிறிஸ்டி போன்றோரை கூறலாம். இவர்கள் எல்லாம் பிஷப் இவானுக்கும் இசக்கிக்கும் கையாட்கள். கையெழுத்து போட மட்டுமா சம்பளம். கோப்புகளை வாசித்து விதிகளின் அடிப்படையில் பரிசீலனை செய்து முடிவெடுக்கவேண்டாமா?

கும்புடு போட்டுட்டு குடுக்கிற பேப்பர வாங்கிட்டு நீட்டுற இடத்துல கையெழுத்து போடுறதுக்கா அரசு இவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *