மேலாளரின் நியமன ஆணையும் நியாயமான கேள்விகளும்


பிஷப் இவான் அம்புரோஸ் எவ்வாறு பள்ளிகளுக்கு மேலாளர் ஆனார் என்று பலர் கேட்கின்றனர். அவருடைய நியமன ஆணை நகலினை பல தடவைகள் கேட்ட பிறகு தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அனுப்பியுள்ளார். Bishopஅதை இங்கே பிரசுரிக்கிறோம். Bishop’s appointment order இதை வாசித்தாலே நிர்வாகத்தின் பெயர் தெரியும். Tuticorin Diocesan Association என்ற N.G.O தான் அதாவது Tuticorin Diocesan Association என்ற தொண்டு நிறுவன செயலர்தான் இவரை மேலாளர் என்று நியமித்திருப்பதற்கான தீர்மானத்தை அனுப்பி அதை மேலாளரின் நியமன ஆணையாக அனுப்பியுள்ளார். இது சார்பாக பொதுமக்கள் எழுப்பும் கேள்விகள்.

1. இந்த தொண்டு நிறுவனத்தில் (Tuticorin Diocesan Association) பாப்பாண்டவர் உறுப்பினர் இல்லை. அப்படி இருக்கும்போது அவருடைய ஆணையின் மூலம் டாக்டர் இவான் அம்புரோஸ் எவ்வாறு பள்ளிகளின் மேலாளராக முடியும்? பாப்பாண்டவர் தூத்துக்குடி டயோசிஸின் மேல் அதிகாரி. அவர் பிஷப்பை நியமிக்கலாம். ஆனால் அவரின் ஆணையின்படி பிஷப் இவான் அம்புரோஸ் எவ்வாறு பள்ளிகளுக்கு மேலாளராக ஆக முடியும்? தமிழ் நாடு சங்கப்பதிவு சட்டப்படி இயங்கும் Tuticorin Diocesan Association என்ற N.G.O-க்கும் பாப்பானவருக்கும் சட்டப்படி சம்மந்தம் இல்லை. 1923ல் உருவான மறைமாவட்டத்திற்கும் பாப்பானவருக்கும் சம்மந்தம் உண்டு என்பது உண்மை. டாக்டர் இவான் அம்புரோஸின் பள்ளி நிர்வாகம் மேற்கண்ட இரண்டையும் மிக்ஸ் பண்ணி குழப்பி கல்வி இலாக்காவின் அறியாமையை பயன்படுத்தி பல சட்டவிரோதங்களை செய்கிறது. இது சரியா என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.

2. Tuticorin Diocesan Association என்ற N.G.O தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் அதன் அடிப்படையில்தான் டாக்டர் இவான் அம்புரோஸ் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த தீர்மான நகல் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படவில்லை. அதன் காரணம் என்ன?

3. தீர்மான நகல் இல்லாமல் பாதிரியார் தியோபிலஸ்தான் செயலர் என்பது கல்வி இலாக்காவுக்கு எப்படி தெரியும்? எத்தனை உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள் யார் யார் உறுப்பினர்கள் என்பது யாருக்கு தெரியும்? பாதிரியார் தியோபிலஸ் செயலர் என்பதை கல்வி முகமை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளதா? இந்த விவரம் தெரியாமல் இருக்கும்போது அவர் கையெழுத்திட்டுள்ள நியமன ஆணை எவ்வாறு செல்லுபடியாகும்? கல்வி இலாகா ஏன் கண்மூடித்தனமாக டாக்டர் இவான் அம்புரோஸ் தலைவராக இருக்கும் கல்வி முகமையை நம்புகிறது?

4. தன்னை மேலாளராக நியமனம் செய்துள்ள மேற்கண்ட Tuticorin Diocesan Association என்ற தொண்டு நிறுவனத்தின் பெயரை தான் பிறப்பிக்கும் ஆணைகளில் குறிப்பிடாமல் வேறு பெயர்களை பிஷப் இவான் ஏன் குறிப்பிடுகிறார்?

5.  இதே டாக்டர் இவான் அம்புரோஸ் மத்திய அரசுக்கு அனுப்பும் கடிதங்களில் மட்டும் Tuticorin Diocesan Association என்ற N.G.O வின் பெயரை பயன்படுத்துகிறாரே அதன் காரணம் என்ன?

6. இந்த Tuticorin Diocesan Association என்ற தொண்டு நிறுவனம் ரிட் மனு 570/1975ல் ஒரு Partyயாக சேர்க்கப்பட்டுள்ளதா? இந்த பெயர் 17.12.1975ல் வெளியிட்ட நீதிமன்ற ஆணையிலோ 10.10.2012 நாளிட்ட ஆணையிலோ இல்லாதிருக்கும்போது இது மைனாரிட்டி நிறுவனம் என்பதற்கு எந்த ஆதாரம் உள்ளது?

7. மேற்படி நியமன ஆணையின் பொருளில் மைனாரிட்டி நிறுவனங்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அது பொய்யா? அது உண்மை என்றால் ஏன் மைனாரிட்டி ஆணை பெற்றதற்கான ஆதாரம் அடங்கிய ஆணைகளை குறிப்பிடவில்லை?

8. மேற்படி ஆணை மூலம் மேலாளர் என்ற பதவிக்கு வந்த டாகடர் இவான் அம்புரோஸ் எதற்காக தனது 09.03.2015 மற்றும் 23.06.2015 நாளிட்ட கடிதங்களில் Tuticorin Diocesan Association என்ற பெயரில் எங்களது நிறுவனத்தை பதிவு செய்துவிட்டு The Roman Catholic Diocese of Tuticorin என்ற பெயரில் செயல்படுகிறோம் என்று எழுதியுள்ளார்?

9. ஏன் பதிவு செய்த சட்டப்பூர்வமான நிறுவனத்தின் பெயரில் செயல்படாமல் வேறு பெயரில் செயல்படவேண்டும்? அதற்கான காரணம் என்ன? இதை கல்வித்துறை எந்த விதிகளின் அடிப்படையில் அனுமதிக்கிறது? கல்வித்துறை தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறதா? அல்லது அவ்வாறு இருக்க ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?

10. டாக்டர் இவான் அம்புரோஸ் அரசையும் மக்களையும் ஏமாற்றுவதற்குத்தான் ஆயர் பட்டம் பெற்றாரா?

11. டாக்டர் இவான் அம்புரோஸ் என்ன சொன்னாலும் அதை கல்வி இலாகா அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவேதும் பிறப்பித்துள்ளதா?

12. மேற்படி நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ள மேலாளரின் அதிகாரங்கள் எவை என்று கல்வி இலாக்காவுக்கோ மக்களுக்கோ அல்லது பள்ளிகளுக்கோ தெரியுமா?

13. பள்ளிகளுக்கு இதுவரை தனது நிர்வாகத்தின் பெயர், பதிவு விவரங்கள், மைனாரிட்டி உரிமை சார்பான ஆவணங்களை தெரியப்படுத்தியிருக்கிறாரா? அவ்வாறு தெரியப்படுத்தவில்லை என்றால் அதற்கு காரணம் என்ன? எதற்காக பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் உண்மைகளை மறைக்க வேண்டும்?

14. தற்சமயம் பதிமூன்று பேர் உறுப்பினர்களாக இருக்கும் இத்தொண்டு நிறுவனத்தை டாக்டர் இவான் அம்புரோஸ் 4.5 லட்சம் கத்தோலிக்க மக்கள் அடங்கிய தூத்துக்குடி டயோசிஸ் என்று எவ்வாறு கூற முடியும்? ஏன் அவ்வாறு கூறுகிறார்? மத்திய அரசு கேட்ட 32 கேள்விகளுக்கு பதில் அளித்த டாக்டர் இவான் 27 வது கேள்வியிலிருந்து 32வது கேள்வி வரை க்கு அளித்துள்ள பதிலை இங்கே ஆதாரமாக வைக்கின்றோம். யார் யார் Tuticorin Diocesan Association என்ற  N.G.O வில் உறுப்பினர்கள் என்பதை டாக்டர் இவான் அம்புரோஸ் கூறுகிறார் பாருங்கள். Bishop Yvon Ambroise’s answers Q 27 to Q 32

15. தான் ஊழலே செய்யவில்லை என்று கூறும் டாக்டர் இவான் அம்புரோஸ் இது விஷயத்தில் திறந்த மனதோடு அனைத்து ஆவணங்களையும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் கல்வி இலாக்காவுக்கும் பொது மக்களுக்கும்  தெரிவிப்பாரா?

16. இவர் திவ்ய நற்கருணையை தினமும் கையில் ஏந்தும்போது தான் கூறிய பொய்களும் அநீதிகளும் மனதில் தோன்றி உறுத்துமா? இல்லை உறுத்தாதா? இதை வாசித்த பிறகாவது உறுத்துமா?

17. டாக்டர் இவான் அம்புரோஸ் நிர்வாகம் ஊழல் நிறைந்தது என்பதை அறிந்த பிறகும் அரசு ஏன் இன்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்காதிருக்கிறது? அரசுக்கு இவர் செய்யும் ஊழல் புரியவில்லையா? அல்லது புரியாதது போல் பாசாங்கு செய்கிறதா?

விடைகள் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.


தன்னார்வ நன்கொடை


பாதிரியார் தொமினிக் அருள்வளனின் சுற்றறிக்கையின் முதல் பக்கம்  இதோ. First Page தன்னார்வ நன்கொடை அதாவது Voluntary Contribution என்று சொல்லிவிட்டு அது எப்படி கணக்கிடப்படவேண்டும் என்று வெட்கம் இல்லாமல் அச்சடித்து dominicஅதையும் டாக்டர் இவான் அம்புரோஸின் அனுமதியுடன் என்று கடைசி பக்கத்தில் குறிப்பிட்டு செய்திமடல் என்று கண்காணிப்பாளர் அனுப்பியிருக்கிறார். இம்மாதிரியான சட்ட விரோதமான பிடித்தங்கள் இருக்கக்கூடாது என்பதுதான் ஆவே  மரியாவின் கோரிக்கை. Voluntary Contribution என்ற பெயரில் கொள்ளை அடிக்கும்  கண்காணிப்பாளர் பாதிரியார் தொமினிக்கையும் அதற்கு அனுமதி கொடுத்திருக்கும் பிஷப் இவான் அம்புரோஸையும் ஆவே மரியா வன்மையாக கண்டிக்கிறது.

பாதிரியார் ரொசாரியோ பர்னாண்டோவின் அடக்க பூசைக்கு கூட கண்காணிப்பாளர் செல்ல வில்லை. ஆயர் இல்லத்தில் இருந்துகொண்டு கோயிலுக்கு போகாமல் இருந்துவிட்டார். ஒரு பாதிரியார் கேட்டதற்கு பிஷப் இல்லை அதனால் கோயிலுக்கு போகவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அவருடைய படத்தை கல்வி மடலில் பெரிதாக போட்டு படம் காட்டியிருக்கிறார். அதையும் ஆசிரியர்கள் நம்புகிறார்கள். கல்வி செய்தி மடல் கடைசி பக்கம்

 


ரிட் மனு 3061/2014ல் இடைக்கால உத்தரவு


ரிட் மனு எண். (MD) 7587/2012  – Filed by The Tuticorin Diocesan Association, Rep.by Rev.Fr.M.Jebanathan, Procurator & Chief Functionary, Catholic Bishop’s House, G.C.Road, Tuticorin-628 001

The order sent to the Tuticorin Diocesan Association by the Central Government is as follows. Copy of Order from the Home Ministry

மேற்கண்ட மனுவை பாதிரியார் ஜெபநாதன் கையெழுத்திட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அதன் நகல் 17 பக்கங்களின் காணப்படுவதால் மூன்று பிரிவாக கொடுக்கப்படுகிறது. அவை இதோ

1 முதல் 6 பக்கங்கள் Page 1 to 6 of Affidavit filed by Fr. Jebanathan in W.P (MD) No. 7587 of 2012

7 முதல் 12 பக்கங்கள்  Page 7 to 12 of Affidavit filed by Fr. Jebanathan in W.P (MD) No. 7587 of 2012

13 முதல் 17 பக்கங்கள் Page 13 to 17 of Affidavit filed by Fr. Jebanathan in W.P (MD) No. 7587 of 2012

இம்மனுவில் பெற்ற இடைக்கால தடை உத்தரவு இதோ Copy of stay order passed in W.P.(MD) 7587 of 2012

இதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த எதிமனுவை (Counter Affidavit) வாசிக்க வேண்டுமா? 5 பக்கங்களில் உள்ள அந்த மனு இதோ Counter Affidavit filed by Central Government in W.P.(MD) 7587 of 2012

ரிட் மனு எண். (MD) 3061/2014 – Filed by  The Tuticorin Diocesan Association, Rep.by Rev.Fr.A.Sahaya Joseph, Procurator & Chief Functionary, Catholic Bishop’s House, G.C.Road, Tuticorin-628 001

மேற்கண்ட மனுக்கள் Procurator & Chief Functionary என்பாரால் The Tuticorin Diocesan Association என்ற N.G.O  வுக்காக உள்துறை அமைச்சகம் FCRA விஷயத்தில் பிறப்பித்த ஆணையை எதிர்த்து தொடரப்பபட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பெறப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆணை மொத்தம் 5 பக்கங்களில் உள்ளது. இதோ.

Page 1 of Court order in W.P 3061 of 2014

Page 2 of Court order in W.P 3061 of 2014

Page 3 of Court order in W.P 3061 of 2014

Page 4 of Court order in W.P 3061 of 2014

Page 5 of Court order in W.P 3061 of 2014

மேற்கண்ட The Tuticorin Diocesan Association என்ற நிறுவனம்தான் தனது  கல்வி முகமை என்று டாக்டர் பிஷப் இவான் அம்புரோஸ் கூறுகிறார். இவர் தன்னை தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு ஆண்டவர் என்றும் கூறுகிறார். ஆனால் இந்த வழக்கில் மட்டும் இவர் மனுதாரராக இல்லாமல் பாதிரியார் ஜெபநாதனும் பாதிரியார் சகாய ஜோசப்பும் மனுதாரராக இருக்க காரணம் என்னவோ? இவர்களுக்கும் 16.04.2012 நாளிட்டு பாதிரியார் விக்டருக்கு அதிகாரம் கொடுத்தது போல் Authorization Letter கொடுக்கப்பட்டிருக்கிறதா? அல்லது The Tuticorin Diocesan Association என்ற நிறுவனத்தின் விதிகளில் அல்லது துணை விதிகளில் ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா? The Tuticorin Diocesan Association தான் கல்வி முகமை என்றால் அக்கல்வி முகமைக்காக பிஷப் இவான் அம்புரோஸ் வழக்கு தொடர முடியுமா? அல்லது அன்னார் மற்றொருவருக்கு வழக்கு தொடர அதிகாரம் அளிக்கலாமா? அப்படி கொடுத்தால் சட்டப்படி செல்லுமா? சட்டப்படி செல்லாது என்றால் இதுவரை தொடர்ந்த வழக்குகளில் எல்லாம் மனுதாரர் முறையாக பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லையா? மேற்கண்டவாறு பல கேள்விகள் எழுகின்றன.

சரி இப்போ மேற்படி ரிட் மனு 3061/2014 ல் பிஷப் இவான் தலைவராக இருக்கும் The Tuticorin Diocesan Association என்ற N.G.O-வின் செயலர் பாதிரியார் சகாய ஜோசப் என்பார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவை (Affidavit) வாசிக்க வேண்டுமா? அது இதோ. 1 முதல் 5 பக்கங்கள் இதோ Page 1 to Page 5 6 முதல் 10 பக்கங்கள் இதோ Page 6 to Page 10 இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள Affidavitல் தலைவர் டாக்டர் இவான் அம்புரோஸ் மத்திய அரசுக்கு 11.10.2013ல் எழுதிய கடிதம் 67, 68 மற்றும் 69 பக்கங்களாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் அவர் பொய் எதுவும் எழுதியிருந்தால் நாங்கள் பொறுப்பல்ல. Pages 67,68 and 69 of affidavit filed by the Tuticorin Diocesan Association in WP(MD) No.3061 of 2014 மேலும் 70, 71 மற்றும் 72 பக்கங்களில் அன்னார் மத்திய அரசுக்கு 24.01.2014 அன்று எழுதிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. இதிலும் உண்மைக்கு மாறான விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் நாங்கள் பொறுப்பல்ல. Pages 70,71 and 72 of affidavit filed by the Tuticorin Diocesan Association in WP(MD) No.3061 of 2014

மேற்கண்ட வழக்குகள் சார்பாக கூடுதல் விவரங்கள் தேவை எனில் ஆவே மரியாவை அணுகவும். எத்தனையோ பொய்கள் அடங்கிய கடிதங்கள் உள்ளன. பொது நலன் கருதி அவைகளை வெளியிடவில்லை.


திரை மறைவில் பாதிரியார் டொமினிக்


பாதிரியார் டொமினிக் திரை மறைவில் இருந்து கொண்டு தனது கையாட்களுடன் சேர்ந்து dominicதிசயன்விளை ஹோலி ரெடீமர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் திரு. நிக்சன் ஆசிரியருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை கெடுத்து நீதி மன்ற ஆணை மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் ஆணையையும் மீறி சேர்மாதேவி கல்வி மாவட்ட அலுவலரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சதிகாரக்கூட்டத்தை கையில் எடுத்து ஆங்கில முதுகலை ஆசிரியை திருமதி எஸ்தர் என்பார் காலமானதால் ஏற்பட்ட காலிப்பணியிடத்தில் செல்வி மிக்கேல் ஜொஸ்பின் என்பாரை வெளிச் சந்தையில் இருந்து ஃப்ரெஷ் ஆக மேலாளர் வழியாக நியமனம் செய்தார். நியமன ஆணை இதோ. Appointment order of Miss Josephine Michael இப்பள்ளியில் பி.டி ஆசிரியராக பணிபுரியும் திரு நிக்சன் என்பார் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். அன்னார் அப்பணியிடத்தில் பதவி உயர்வு பெற முழு தகுதி உள்ளவர். எனவே பாதிக்கப்பட்ட இவர் நீதி மன்றத்தில் தனக்குதான் அப்பணியிடம் கொடுக்கப்படவேண்டும் என்று ரிட் மனு 3230/2014 என்ற வழக்கு தொடர்ந்தார். நீதி மன்றம் திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலருக்கு தக்க ஆணை பிறப்பிக்க உத்தரவிட்டது. தான் நியமித்த நபருக்கே ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடனே மேலாளர் இவான் அம்புரோஸ் முதன்மை கல்வி அலுவலருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் இதோ Manager’s letter to CEO page 1 Manager’s letter to CEO page 2 ஆனால் திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் தனது ஆணையில் மேற்படி நிக்சன் என்பாருக்கு அப்பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிட்டார். அவ்வாணை இதோ CEO’s letter page 1 CEO’s letter page 2 அவ்வாணை 02.06.2014ல் கையெழுத்தானது பாதிரியார் டொமினிக் காதுக்கு வருகிறது. உடனே காது முறுக்கி விட்ட குதிரை போல செயல்பட ஆரம்பித்தார். தலைமை ஆசிரியரை முடுக்கி விட்டு 04.06.2014 அன்றே செல்வி மிக்கேல் ஜொஸ்பின்  என்பாரின் நியமன ஒப்புதலுக்கான கருத்துரு சேர்மாதேவி கல்வி மாவட்டத்திற்கு பறந்தது. பாதிரியார் டொமினிக்கின் கூட்டாளிகள் ஒன்று செர்ந்தனர். பண பரிவர்த்தனைகள் நடந்ததாக தெரிகிறது. சம்மந்தப்பட்ட இளநிலை உதவியாளர், கண்காணிப்பாளர், நேர்முக உதவியாளர் மற்றும் பொறுப்பில் இருந்த மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் தீவிர சிகிச்சை தொடங்கியது. அவசர அவசரமாக பாதிரியார் டொமினிக்கிடம் 13.06.2014 தேதியிட்டு உறுதிமொழி என்று தலைப்பிட்ட ஒரு கடிதம் கோப்பில் ஊடுறுவியுள்ளது. அது எப்படி அக்கோப்புக்கு சென்றது என்பது புதிராய் உள்ளது. பாதிரியார் டொமினிக் ஆர்வ மிகுதியில் உறுதிமொழி என தொடங்கி கடிதமாக அதை கொடுத்திருப்பதும் டொமினிக் அருள் வளன் என்று கண்காணிப்பாளர் நியமனம் பெற்ற அவர் டொமினிக் என்ற பெயர் மட்டும் எழுதி டொம் என்று கையெழுத்திட்டு கொடுத்திருப்பதும் வியப்பாகவும் வினோதமாகவும் உள்ளது. இவ்வளவு கதையும் தாளாளருக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்பதும் தெரியவருகிறது. சாதாரணமாக நீதிமன்றம் அல்லது அரசுதான் டிக்ளரேஷன் வெளியிடும். ஆனால் 04.01.2014 தேதியிட்டு பாதிரியார் டொமினிக் ஏதோ ஒரு பெரிய நீதிபதிபோல மேற்படி பள்ளி மைனாரிட்டி பள்ளி என்று தானே விளம்புகை செய்துகொண்டார். அதை தலைமை ஆசிரியர் அட்டெஸ்ட் வேறு செய்து கொடுத்துள்ளார். யார் யார்தான் டிக்ளரேஷன் கொடுக்கணும்னு வெவஸ்த இல்லாம் பொயிட்டுன்னு ஆசிரியர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

13.06.2014ல் குறிப்பு எழுதி சிறுபான்மை பள்ளி என்று பல இடங்களில் பாட்டு பாடி ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் 16.06.2014ல் கையெழுத்தாகியது. அலுவலக குறிப்பில் இருந்து ஒப்புதல் வரை உள்ள சரித்திர நாவல் இதோ Office Remarks 1 Office Remarks 2 Office Remarks 3 Office Remarks 4 Office Remarks 5 DEO’s approval ஒரு வழியாக 16.06.2014ல் திரு வைகுண்ட ராமன் என்ற மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஒப்புதல் ஆணையில்  கையெழுத்திட்டுவிட்டார். அவர் கூட மைனாரிட்டி என்ற அதே பல்லவிதான் பாடியுள்ளார். அவரவர் பெற்ற சன்மானத்திற்கு தங்களது வார்த்தைகளால் கோப்பில் வாலசைத்துள்ளது தெளிவாக தெரிகிறது. அனால் அதிசயம் ஒன்றும் நடந்ததுள்ளது!!!. மேற்படி ஆசிரியைக்கு நியமன ஒப்புதலை 13.06.2014 என்ற தேதியிலேயே பாதிரியாரின் ஆதரவாளர்கள் ஆர்வ மிகுதியில் மாவட்ட கல்வி அலுவலரின் கையெழுத்து வாங்கி கொடுத்து விட்டார்கள்.   இதற்கெல்லாம் காரணம் திரைமறைவில் இருந்த ஒன் மேன் ஆர்மி என்று தன்னை பெருமையாக கூறிக்கொள்ளும் பாதிரியார் டொமினிக்தான் என்பது தெரிய வந்துள்ளது. 13.06.2014ல் கையெழுத்தான ஒப்புதல் ஆணை இதோ Approval dated 13.06.2014 இரண்டு ஆணைகளும் வேறுபட்டிருப்பதை கூட பார்க்கலாம்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் மனாரிட்டி பள்ளி என்று மேற்படி செல்வி மிக்கேல் ஜோஸ்பின் நியமனத்திற்கு 13.06.2014ல் ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டு 9 மாதங்கள் கழித்து 26.03.2015ல் மேற்படி மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியின் கண்காணிப்பாளர், செல்வி மிக்கேல் ஜொஸ்பின், தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளரிடம் பள்ளி மைனாரிட்டி பள்ளியா என்றும் அதன் ஆதாரத்தை அனுப்புமாறும் வேண்டியுள்ளார். அதுவும் அந்த மனாரிட்டி விவரம் எந்த பக்கத்தில் எந்த பாராவில் உள்ளது என்ற் விவரத்தையும் அப்பாவி போல கேட்டுள்ளார் . அக்கடிதம் இதோ DEO asks information from school about minority இதை வாசிக்கும் பொதுமக்களே! ஆசிரியர்களே! தயவு செய்து இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை வழங்கி உதவிடுக. எமது சங்கம் இது சார்பான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் கேட்டுள்ளது. அம்மனுவை மாவட்ட கல்வி அலுவலக பொது தகவல் அலுவலர் 10.09.2015ல் பெற்றுள்ளார். மனுவை வாசிக்க வேண்டுமா? இதோ 09.09.2015 நாளிட்ட தகவல் அறியும் மனு