பிஷப் இவான் பொய் சொல்வாரா?

திரு எஸ். பீட்டர் ராஜ் என்பாருடைய பணி நீக்க ஆணையை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் ஆசிரியருக்கு சார்பாகவே முடிவுற்றது. இருப்பினும் பிஷப் இவான் அம்புரோஸ் தனது ஆங்காரத்தினையும் அதிகாரத்தையும் நிலை நாட்டிட உச்ச நீதிமன்றத்தில் பாதிரியார் விக்டர் மூலம் வழக்கு தொடர்ந்த்து உயர் நீதி மன்ற ஆணைகளுக்கு இடைக்கால தடை பெற்றார். இவ்வழக்கை நடத்த பிஷப் வீட்டில் இருந்தோ இசக்கி என்ற பாதிரியார் டொமினிக் வீட்டில் இருந்தோ அல்லது பாதிரியார் விக்டர் வீட்டில் இருந்தோ பணம் கொணரவில்லை. அனைத்தும் ஆசிரியர்களிடம் சுரண்டிய பணம் ஆகும். இதில் வேடிக்கை என்னவெனில் பாதிரியார் டொமினிக் தந்திரமாக தான் கண்காணிப்பாளர் ஆன பிறகு கண்காணிப்பாளர் பதவியில் இல்லாத பாதிரியார் விக்டரை வழக்குரை மனுவில் கையெழுத்து போடச் சொல்லியிருக்கிறார். அன்னார் தனக்காகவும் முதல் எதிரி பிஷப் இவானுக்காகவும் கையெழுத்திட்டு நீதிமன்றத்தை ஏமாற்றி தடை ஆணை பெற்று விட்டார். இந்த சட்ட விரோதத்தை கண்டு பிடித்து அதற்கான ஆவணங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பித்து அந்த அடிப்படையில் வழக்கை தள்ளுபடி செய்ய ஆசிரியர் மனு (IA) செய்தார். உடனே பிஷப் இவான் எதிர் மனு சமர்ப்பித்தார். தானே எதிர் மனுவில் தனக்காகவும் இரண்டாம் எதிரிக்காகவும் 14.08.2015ல் கையெழுத்திட்டு 18.08.2015ல் நீதிமன்றத்தில் சம்ர்ப்பித்தார். பிஷப் இவான் ரொம்ப கேஷுவலாக பாதிரியார் விக்டருக்கு 16.04.2012 அன்றே சம்மந்தப்பட்ட ஆசிரியரது வழக்கை மட்டும் நடத்துவதற்காக கண்காணிப்பாளர் பதவி கொடுத்துள்ளது போல நியமன ஆணை ஒன்றை தயாரித்து பல லட்சங்கள் செலவழித்து அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து  வழக்கை முடிக்காத வண்ணம் ஆக்கியுள்ளார். உண்மையை சொல்லி உண்மையான ஆதாரங்களை சமர்ப்பித்து இதை செய்திருந்தால் பாராட்ட வேண்டிய செயல்தான். ஆனால் கேவலம் தன்னுடைய ஆங்காரத்தையும் அதிகாரத்தையும் நிலைநாட்ட பொய் என்ற ஆயுதத்தையா எடுக்க வேண்டும்? தான் ஒரு கத்தோலிக்க பிஷப் என்பதை மறந்து!! அதுவும் போலி ஆவணங்களையா சமர்ப்பிக்க வேண்டும்? வேடிக்கை என்னவென்றால் பல போலி ஆவணங்களை பிஷப் இவான் தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் உதவியோடு தயாரித்து சமர்ப்பித்துள்ளார். தினமும் கையில் நற்கருணை ஏந்தும் ஒரு கத்தோலிக்க பிஷப்பே இப்படி இருக்கிறார் என்றால் யாரிடம் போய் முறையிடுவது? இதற்கு பாவ சங்கீர்த்தனம் பண்ணியிருப்பாரா? பாதிரியார்களிடம் சொன்னால் அவர்கள் ஒரே வரியில் “ ஏய் அவர் எப்போதாவதுதான் உண்மை பேசுவாரப்பா” என்று சொல்கிறார்கள். ஒரு பாதிரியார் மிக அழகாகச் சொன்னார். அவரு ஒரு அரசியல்வாதி!!! எப்படியோ பிஷப்பா வந்துட்டாரு!!! என்று. Bishopநெஞ்சினில் கைவைத்து ஒரு அப்பாவிபோல காணப்படும்  இவருடைய சுயரூபம் எல்லா பாதிரியார்களுக்கும் தெரியத்தான் செய்கிறது. (படத்தில் க்ளிக் செய்து முழு உருவம் பார்க்கவும்) பிஷப் இவான் அம்புரோஸ் அப்பட்டமாக நீதி மன்றத்திலேயே சமர்ப்பித்திருக்கும் பொய்களை இங்கு காணலாம். அவர் பாதிரியார் விக்டருக்காக  16.04.2012 என்ற தேதியிட்டு எந்த குறிப்பு எண்ணும் இல்லாமல் இப்போது தயாரித்த நியமன ஆணையையும் பாதிரியார் விக்டருக்கு 2010/172 என்ற குறிப்பு எண்ணுடன் 29.04.2010ல் கொடுத்த உண்மையான நியமன ஆணையையும் இங்கே காணலாம். போலி ஆவணங்கள் தயாரிப்பதில் பிஷப் இவானுக்கு நிகர் இவான்தான் என்று உலகமே போற்ற்ககூடிய அளவுக்கு சமுதாயத்தில் ஒரு உன்னத நிலையை அடைந்து விட்டார்.

பிஷப் இவானின் எதிர்மனுவின் முதல் பக்கம் Page 1 of IA

பிஷப் இவானின் எதிமனுவின் 4வது பக்கம் Page 4 of IA

பிஷப் இவானின் எதிமனுவின் 5வ்து பக்கம் Page 5 of IA

பிஷப் இவானின் எதிமனுவின் 7வது பக்கம் Page 7 of IA

பாதிரியார் விக்டருக்கு 16.04.2012ல் கொடுத்துள்ளதாக கூறப்பட்ட நியமன ஆணை Page 17 of IA அப்படியே இந்த ஆணை கொடுத்திருந்தால் ஏன் அதை பாதிரியார் விக்டர் தனது 03.01.2014 நாளிட்ட ரிஜாய்ண்டர் மனுவில் குறிப்பிடவில்லை? அம்மனுவில் நேரடியாக தன்னை கண்காணிப்பாளர் என்றல்லவா குறிப்பிட்டுள்ளார்? 16.04.2012 நாளிட்ட தனது ஆணை நடைமுறையில் இருந்தால் ஏன் பிஷப் இவான் அம்புரோஸ் 14.08.2015 நாளிட்ட மனுவை தானே கையெழுத்திட்டு நீதி மன்றத்தில் சமர்க்க வேண்டும்? இது பாதிரியார் விக்டருக்கு தெரியுமா? அப்போ 16.04.2012ல் கொடுத்ததாக கூறப்படும் ஆணை ரத்து செய்யப்பட்டுவிட்டதா? பல கேள்விகள் எழுகின்றன. ஒரு கத்தோலிக்க பிஷப் இப்படி பொய்க்கு மேல் பொய் சொன்னார் என்றால் திருச்சபை எப்படி தழைத்தோங்கும்? கத்தோலிக்க திருச்சபையை அழித்து நாசமாக்க வந்தவர் போல காட்சி அளிக்கிறார் இந்த பிஷப் இவான்!!!

பாதிரியார் விக்டருக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட 2010/172 நாள் 29.04.2010 என்ற நியமன ஆணை இதோ Appointment order of Fr. M.G.Victor பாதிரியார் விக்டருக்கு பிறகு பாதிரியார் ரூபர்ட் என்பார் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அன்னாரின் நியமன ஆணை இதோ Appointment order of Fr. Rubert இவருக்கு பிறகு பாதிரியார் சகாயம் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அன்னாரின் நியமன ஆணை இதோ Appointment order of Fr. Sahayam இவருக்கு பிறகு பாதிரியார் டொமினிக் அருள் வளன் என்பார் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அன்னாரின் நியமன ஆணை இதோ Appointment order of Fr. Dominic Arul Valan இந்த பிஷப் இவான் பாதிரியார் விக்டருக்கு பிறகு பாதிரியார்கள் ரூபர்ட், சகாயம் மற்றும் டொமினிக் அருள் வளன் ஆகியோருக்கு அளித்திருக்கும் நியமன ஆணைகள் எதிலும் மேற்படி 16.04.2012ல் பாதிரியாருக்கு கொடுத்ததாக கூறப்படும் ஆணை குறிப்பிடப்படவில்லை.

மனுவில் எதிர்மனுதாரர் பிஷப் இவான் கையெழுத்திட்டுள்ள பக்கம் Page 13 of IA

அடுத்த வேடிக்கை என்னவென்றால் 23.10.2013ல் தாந்தான் ஆர்.சி.பள்ளிகளின் கண்காணிப்பாளர் என்றும் தாந்தான் 2வது மனுதாரர் என்றும் பாதிரியார் டொமினிக் டொம் என்று கையெழுத்திட்டு உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். கென்னடி என்ற பாதிரியார் – வக்கீல் இதற்கு சான்று அளித்திருக்கிறார். அவருடைய உண்மையான பெயர் இசக்கி. அது இன்னும் அதிகாரப்பூர்வமாக மாற்றப்படவில்லை. மேலும் டொமினிக் என்று கூட்டபுளியில் இருக்கும்போது கயெழுத்திட்டிருக்கிறார். அதை மாற்றி ஸ்டைலாக டொம் என்று கையெழுத்திடுகிறார். அது வேறு கதை!!! இப்போ சுப்ரீம் கோர்ட்  கதைக்கு வருவோம். 23.10.2013ல் தான்தான் கண்காணிப்பாளர் என்று கையெழுத்திட்ட அந்த ஆவணம் இதோ Father Dominic as Deponent on 23.10.2013

03.01.2014 அன்று நீதி மன்றத்தில் தான்தான் 2வது மனுதாரர் என்று மேற்படி வழக்கில் பாதிரியார் விக்டர் கையெழுத்திடுகிறார். அதில் அவர் பிஷப் இவான் வழங்கிய 16.04.2012 ஆணையின் அடிப்படையில் மனு செய்வதாக கூறவில்லை. அப்படி ஒரு ஆர்டர் அந்த சமயத்தில் இல்லாததால் அதை குறிப்பிடவில்லை. இது நெஞ்சை தொட்டுக்கொண்டிருக்கும் பிஷப்புக்கு நன்றாகவே தெரியும். பாதிரியார் விக்டருக்கும் தெரியும். பாதிரியார் விக்டர் அந்த சமயத்தில் கண்காணிப்பாளர் என்று திருச்சி கான்வெண்டை சேர்ந்த அந்தோனி டாரதி என்பார் நோட்டரி சான்று வழங்கியிருக்கிறார்கள். இது ஒரு கன்னியாஸ்திரி போலும். வெள்ளை அங்கி கூறும் பொய்க்கு வெள்ளை அங்கி சான்றளித்துள்ளது. அந்த ஆவனம் இதோ Father Victor as Deponent on 03.01.2014 இவைகள் பிஷப் இவானின் பொய்களுக்கு ஆதாரமா? இல்லையா? 16.04.2012 ஆர்டர் மூலம்   இவை பொய்தான் என்று நிரூபித்துள்ளார்.

27.08.2015ல் பாதிரியார் விக்டருக்கு ஒரு கடிதம் எழுதி மேற்படி 16.04.2012 நாளிட்ட கடிதம் பற்றி அன்னாருக்கு ஏதாவது தெரியுமா என்றும் அப்படி ஒரு கடிதம் அவருக்கு உண்மையிலேயே கொடுக்கப்பட்டதா என்றும்  பதிவு தபாலில் கேட்கப்பட்டது. அவர் அக்கடிதத்தை 29.08.2015ல் பெற்றுள்ளார். இதோ அக்கடிதம். பாதிரியார் விக்டருக்கு எழுதிய கடிதம் அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே அன்னாரிடம் தருவதற்கு பதிலேதும் இல்லை என்று கருதப்படுகிறது. மனசாட்சி உருத்துகிறது போலும். பதில் சொன்னால் இடி ஆப்ப தெத்தாகிவிடும் என்று கூட நினைக்கலாம். நீதி மன்றத்தில் பொய் சொன்னதற்காக ஏற்கனவே பாதிரியார் விக்டருக்கு இதற்கு முன்னர் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  நோட்டீஸ் இதோ.

12.08.15 page 1  12.08.15 page 2

இதனை தொடர்ந்து 02.09.2015 நாளிட்ட வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வக்கீல் நோட்டீசின் நகலினை இணைத்து முறைப்படி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் நீதிமன்ற வழக்கு தொடருவது சார்பான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவைகளை கீழே காணலாம்.

Notice Page 1

Notice Page 2

Notice Page 3

Information to Registrar, Madras High Court

பிஷப்பின் இன்னொரு பொய். 10.10.2012 நாளிட்ட நீதிமன்ற ஆணையின் முதல் இரண்டு பக்கங்கள் மட்டும் கீழெ கொடுக்கப்படுகின்றன. இரண்டாம் பக்கத்தில் 10வது இனம்தான் க்ளு. வாசகர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். பாதிரியார் ரொசாரியோ பர்னாண்டோ 29.09.2015ல்தான் இறந்தார். இதுவும் ஒரு க்ளு.

Page 1 of court order

Page 2 of court order

ஆவே மரியா சங்கம் சென்னை உயர் நீதி மன்றத்தில் ரிட் மனு 8491/2009 என்ற வழக்கு தொடுத்தது. அரசை ஏமாற்றி ட்ரான்ஸ்பர் பவர் வாங்கியதை எதிர்த்து அவ்வழக்கு தொடரப்பட்டது. அதில் 7வது எதிரி மேலாளர் இவான் அம்புரோஸ். 8வது எதிரி கண்காணிப்பாளர். அப்போது பாதிரியார் விக்டர்தான் அந்த பதவியில் இருந்தார். அன்னார் 25.10.2010ல் எதிர் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில் பல பொய்களை நீதிமன்றத்தில் சம்ர்ப்பித்தார். அந்த மனு 15 பக்கத்தில் உள்ளது. அவைகள் இதோ. Counter (1)  Counter (2)  Counter (3)  Counter (4)  Counter (5)  Counter (6)  Counter (7)  Counter (8)  Counter (9)  Counter (10)  Counter (11)  Counter (12)  Counter (13)  Counter (14)  Counter (15) வாசித்து விட்டீர்களா? எத்தனை பொய்கள் என்று எண்ணிவிட்டீர்களா? ஆவே மரியா சங்க செயலாளர் கீழ்கண்ட மனுவை அனுப்பி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வேண்டினார். மனுவை வாசிக்கவும். RTI Petition (1)  RTI Petition (2)  RTI Petition (3)

கண்காணிப்பாளர் பாதிரியார் விக்டர் அனுப்பிய பதில் இதோ. Reply from Superintendent (1)  Reply from Superintendent (2) எதிமனுவில் பொது முன்னுரிமை பட்டியல் பேணுவதாகவும் அதை ஒவ்வொரு வருடமும் அப்டேட் செய்வதாகவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கண்காணிப்பாளர் அந்தந்த கல்வி ஆண்டின் முடிவில் அவைகளை அழித்து விடுவதாகவும் நடப்பு ஆண்டுக்குரிய பொது முன்னுரிமை பட்டியல் இருப்பதாகவும் அதை பெற ரூபார் 292/- அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார். உடனே அந்த தொகை வரைவோலையாக எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டது. அதன் விவரம் இதோ. Letter sent with Demand Draft for Rs 292/- ஆனால் அய்யகோ கண்காணிப்பாளரிடம் இருந்து கீழ்கண்ட பதில் வந்தது. Superintendent of RC Schools, Tuticorin, says there is no common seniority list for them. The DD was returned to the petitioner அதாவது சீனியாரிட்டி லிஸ்ட் நிர்வாகம் பேணுவதில்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

பிஷப் இவான் அம்புரோஸ் தனது நிர்வாகம் அதிகாரப் பூர்வமான பொது முன்னுரிமை பட்டியலை பேணவிலை என்றும் ஏதோ ஒரு பட்டியலை இயக்குநருக்கு கொடுத்ததாகவும் கூறுகிறார். அந்த ஆவணம் இதோ. Bishop Yvon Ambroise, the Manager of RC Schools says that he sent an unofficial seniority list to the Department.

அடுத்து அதே டாக்டர் இவான் தான் பேணும் பொது முன்னுரிமை பட்டியல் பொது ஆவணம் அல்ல என்று ஒரு தடால் அடி அடிக்கிறார் பாருங்கள். அதற்கு ஒரு படி மேலே போய் சிறுபானமை பள்ளிகளுக்கு பணிமூப்பு பட்டியல் பொருந்தாது என்று கூறுகிறார். இது பொய்யா? அல்லது மேற்சொன்ன ரிட் மனு 8491/2009-ல் இவர் தாக்கல் செய்துள்ள எதிர்மனுவில் கூறப்பட்டுள்ள விவ்ரங்கள் பொய்யா? அல்லது இரண்டுமே பொய்யா? Bishop Yvon Ambroise, the Manager of RC Schools says that the seniority list is not public document and it is not applicable to them.

சில பொய்களை பிஷப் கண்காணிப்பாள்ர்கள் மூலம் சொல்வார். அவை இதோ. கண்காணிப்பார் பாதிரியா குமார் ராஜா வழியாக சொன்ன பொய்

பிஷப் இவான சீனியாரிட்டி மைனாரிட்டிக்கு பொருந்தாது என்பார். ஆனால் கண்காணிப்பாளரை அது பேணப்படுகிறது என்று அரசுக்கு எழுதச் சொவார். அது சார்பான கடிதம் இதோ காமன் சீனியாரிட்டி பேணுகிறோம் என்று கண்காணிப்பாளர் சாண்று இது சார்பாக அரசு தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்பதை கீழே காணவும். காமன் சீனியாரிட்டி இல்லை என்கிறார் இயக்குநர்