Comedy of Errors!!!

1923ல் துவங்கப்பட்ட தூத்துக்குடி மேற்றிராசனத்தை சார்ந்த பல்வேறு பாதிரியார்களின் நிலமை அவர்களுக்கே தெரியாது என்பதை ஆவே மரியா வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறது. The Tuticorin Diocesan Association என்ற NGO-வில் தாங்கள் உறுப்பினரா என்றும் எந்த தேதியில் தாங்கள் உறுப்பினர் என்றும் தெரிந்து கொள்ளட்டும். 2014-15 ஆண்டு உறுப்பினர்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்க Members of the NGO Tuticorin Diocesan Association in 2014-2015 மேலும் 2014-15 ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் பட்டியல் வேண்டுமா? க்ளிக் New Members joined TDA in 2014-15

இப்போ எல்லாருக்கும் அவரவர் உறுப்பினரா என்றும் என்றைக்கு உறுப்பினரானார் என்றும் தெரியும். பிஷப் இவான் அம்புரோஸ் என்றைக்கு உறுப்பினராக ஆனார் தெரியுமா? 28.09.2005. பிஷப் பட்டம் பெற்ற தேதி 18.05.2005. நான்கு மாதங்களுக்குப்பிறகுதான் அவரை மேற்படி சங்கம் உறுப்பினராக சேர்த்துள்ளது. அதாவது 130 நாட்கள் கழித்து. ஆனால் 19.05.2005 லேயே அதாவது அவர் உறுப்பினர் ஆகுமுன்பே மேற்படி சங்கத்திற்கு அவர் தலைவர் ஆகிவிட்டார் என்று சான்று வழங்கி அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் பாவம். கத்தோலிக்க பிஷப் பொய் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். மேற்படி NGO, பிஷப் அமலநாதர், பீட்டர் பெர்னாண்டோ மற்றும் இவான் அம்புரோஸ் ஆகியோருக்கு பிறப்பித்துள்ள நியமன ஆணைகளை வாசிக்க வேண்டுமா? க்ளிக் Appointment orders of Bishops Amalnather Peter Fernando and Yvon Ambroise இப்போ இவருடய அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் செல்லுமா? செல்லாதா? என்ற கேள்விக்குறி எழுகிறதா? மேற்படி NGO வில் எந்த வருடத்தில் இருந்து மெம்பர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்? இதுவும் பாதிரியார்களும் பொதுமக்களும் யோசிக்கவேண்டிய ஒரு விசயம்!!!. பிஷப் இவானுடைய காமெடி ஒன்றை கீழே தருகிறோம். யாராவது ஒரே ஆளுக்கு ஒரே பதவிக்கு 3 வகையான நியமன ஆணை கொடுப்பார்களா? சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல பாதிரியார் எம்.ஜி.விக்டருக்கு கொடுத்துள்ள மூன்று வகையான நியமன ஆணைகள் இதோ. முதல் ஆணை Appointment order of Fr. M.G.Victor இதே பாதிரியார் மலையன்குளம் பங்கு சாமியான பிறகு, கண்காணிப்பாளர் என்ற நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ஆசிரியருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். பாதிரியார் டொமினிக் (இசக்கி) கண்காணிப்பாளராக இருக்கும்போது மனுவில் பாதிரியார் எம்.ஜி.விக்டர் கையெழுத்திட்டுள்ளார் என்ற விவரத்தினை எதிர்மனுதாரர் சொன்னவுடன் பிஷப் இவான் அம்புரோஸ், தான் கத்தோலிக்க கிறிஸ்தவர் என்ற ஓரு சிறு உணர்வு கூட இல்லாமல் பொய் சொல்கிறோமே என்ற பயம் இல்லாமல் பழைய தெதியிட்டு பிறப்பித்த பொய்யான ஆர்டர் இதோ பாதிரியார் விக்டருக்கு 16.04.2012ல் கொடுத்துள்ளதாக கூறப்பட்ட நியமன ஆணை Page 17 of IA இதை மேலாளர் 14.08.2015ல் கொடுத்துள்ளார். சாதாரண மனிதன் கூட பொய் சொல்ல கூச்சப்படுவான். இவர் ஒரு கத்தோலிக்கர். அதுவும் ஒரு பிஷப். ஒரு பெரிய மனிதர். இவரு இப்படி பொய் சொல்லலாமா? உண்மைக்காக தோற்பதும் ஒருவகை வெற்றிதான் என்பது இந்த பெரிய மனுஷனுக்கு தெரியவில்லையே என்று பலரும் வருத்தப்படுகின்றனர். இதே பாதிரியார் விக்டருக்கு பிஷப் இவான் அம்புரோஸ் மற்றொரு வகையில் நியமன ஆணை கொடுத்துள்ளார். தனது  WMP 138/2011 in WP 570/75 என்ற மனுவில் Type Set ல் 34 வது பக்கத்தில் பிஷப் இவான் இதை இணைத்துள்ளார். அது இதோ Another Appointment order issued to Fr.M.G.Victor இதில் காமெடி என்னவென்றால் Bishop Yvon Ambroise appeared before court as the Superintendent of schools in WMP 138 of 2011 இதில் அடுத்த காமெடி என்னவென்றால் இதே மனுவில் உயிரோடு இருந்த பாதிரியார் ரோசாரியோ பெர்னாண்டோவை இறந்து விட்டார் என்று மேற்படி மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பாதிரியார் ரோசாரியோ பெர்னாண்டோ இறந்தது 29.09.2015ல். அன்னாருடய இறப்பு சான்று இதோ. Death Certificate of Fr. Rosario Fernando

பாதிரியார் சந்தானம் என்பாருக்கு கொடுத்துள்ள நியமன ஆணை:- சுப்ரீம் கோர்ட்டில் சிவில் அப்பீல் 1868/14 மற்றும் 1869/14 ஆகிய வழக்குகளில் பிஷப் இவான் அம்புரோஸ் தனது தவறை மறைக்க இணைத்துள்ள நியமன ஆணை இதோ. Appointment order issued to Fr. Santhanam அப்பாய்ண்மெண்ட் தேதி 13.05.1999. Effective from 14.06.1999. இதில் காமெடி என்னவென்றால் பிஷப் இவான், இசக்கி (பாதிரியார் டொமினிக்) மற்றும் திரு.ரெக்ஸ் பாக்கியநாதன் (பாதிரியார் எட்வர்ட் மூலம் பிஷப் இவானுக்கு அறிமுகமான நண்பர். தற்போது பொத்தக்காலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணிபுரியும் திருமதி மார்க்ரெட் என்பாரின் கணவர்) ஆகியோர் சேர்ந்து முன்னாள் மேலாளர் ஆயர் எஸ்.டி.அமல்நாதரின் கையெழுத்தையும் பாதிரியார் சந்தானம் என்பாரின் கையெழுத்தையும்,  அவர்களாகவே போட்டு சுப்ரீம் கோர்ட்டில் இவான் அம்புரோஸ் தாககல் செய்துள்ளார். யாருக்கு வரும் இந்த தைரியம்? இந்த நியமன ஆணை தங்களுக்கு தரப்பட்டதா என்பதை பாதிரியார் சந்தானம் அவர்களிடம் கேட்டதற்கு அவர் “இல்லை” என்ற உண்மையை கூறிவிட்டார். நியமன ஆணையில் தேதி மற்றும் முகவரியை எழுதியிருப்பவர் திரு ரெக்ஸ் பாக்கியநாதன் என்பதை நிரூபிக்க கீழ்கண்ட கடிதங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

29.11.14    Response to RTI Petition dated 29.11.2014

03.12.14    Response to RTI Petition dated 03.12.2014

17.12.14     Response to RTI petition dated 17.12.2014

18.12.14     Response to RTI petition dated 18.12.2014

போலி ஆவண தயாரிப்பில் பிஷப் இவானுடன் சேர்ந்துள்ளவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மேற்படி நான்கு தகவலறியும் மனு பதில்களை எழுதினது யார் என வேண்டினதற்கு பொத்தக்காலன்விளை பள்ளி தலைமை ஆசிரியை பதில் தர மறுத்துள்ளார். அவர் தனது கணவரை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை. தகவல் ஆணையம் மேற்படி தகவல்களை கொடுக்கும்படி ஆணையிட்ட பிறகும் தகவல்கள் இதுவரை வரவில்லை. தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி நியமன ஆணையில் ஆயர் அமலநாதரின் கையெழுத்தையும் பாதிரியார் சந்தானம் என்பாரின் கையெழுத்தையும் பிஷப் இவான் அம்புரோஸ்தான் போட்டார் என்றும் தான் போடவில்லை என்றும் இசக்கி என்ற சங். டொம்  கூறிக்கொண்டிருப்பதாக செய்தி உலா வருகிறது. உண்மை விரைவில் வெளிவரும். பாராசூட்டை மாட்டிட்டு துள்ளுறதுக்குப்பதில் ஸ்கூல் பேக்கை மாட்டிட்டு ப்ளேன்ல இருந்து துள்னானாம் ஒருத்தன். அதுபோல, அவசரத்தில், அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் தயாரிப்பதற்குப்பதில் ஆத்தரைசேஷன் லெட்டரை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் கொடுத்துவிட்டார் பிஷப் இவான் அம்புரோஸ். இதில் பிஷப் இவான் செய்துள்ள அடுத்த காமெடி என்னவென்றால் எல்லா பொய்களையும் எல்லா போலி ஆவணங்களையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டு அவைகள் எல்லாம் உண்மை என்று ஸ்ட்ராங்கா கையெழுத்திட்டுள்ளார் பாருங்கள். இந்த தைரியம் ஒரு சாதாரண கத்தோலிக்கனுக்கு கூட வராது. இதோ அவரது தைரியத்திற்கு ஆதாரம் Page 13 of IA

இதுவரை பண்ணின காமெடி போதாது என்று 75 வ்யது முடியும் வரை காமெடி பண்ணுவேன் என்று பிஷப் அடம் பிடிப்பதாக தெரிய வருகிறது. டயோசிஸை சீரழிக்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டார் போலிருக்கே என்று பாதிரியார்கள் வேதனையில் உள்ளனர். நேரடியாக கேள்வி கேட்டால் வெளியே தள்ளி விடுவார் என்ற அச்சத்தில் சிலர் கையெழுத்தில்லாத கருத்து தெரிவிப்பு கடிதங்கள் எழுத ஆரம்பித்துள்ளனர். பயத்தினால் கையெழுத்திடாமல் இருக்கலாம். ஆனால் அதில் கூறப்பட்டுள்ளவைகள் உண்மை என்றால் அவைகளை புகார் பெட்டியில் போடப்பட்டுள்ள கடிதங்களாக கருதி மேலதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தவறில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. எத்தனையோ சாதாரண மனிதர்கள் கூட உண்மைக்காக உயிரைக்கூட விடத்தயாராக இருக்கும்போது இந்த பெரிய மனுஷன் அதுவும் ஒரு கத்தோலிக்க பிஷப் இப்படி அடுக்கடுக்காக பொய் சொல்லுகிறாரே என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது என்று பொதுமக்கள் குமுறுகிறார்கள். நீதிமன்றங்கள் கிறிஸ்தவர்களைப்பற்றி என்ன நினைக்கும்? தனது தோல்வியை அல்லது குற்றத்தை தன்னைவிட சிறியவர்களிடம் ஏற்றுக்கொள்வதுதான் சான்றோரின் குணம்.

மேலும் பல விவரங்கள் கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆயர் அம்புரோஸின் பொய்கள்

2 thoughts on “Comedy of Errors!!!”

  1. இவர்கள் முதலில் ஞானஸ்தானம் பெற்றிருக்கிறார்களா என்றும் பார்க்கவும்.

  2. சிறுபான்மை நிா்வாக கல்வி நிலையங்கள் -அரசு பணியிட நியமனங்களிலும் ஒழுங்கு நடவடிக்கையிலும் வானளாவிய அதிகாரம் படைத்துள்ளதுதான் முதல் காரணம். தமிழநாடு தனியாா் நிதி உதவி பெறும் பள்ளிகள் ஒழுங்கு படுத்தும் சட்டம் அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும்படிச் செய்ய வேண்டும். பாடத்திட்டத்தை நடத்தி முடிப்பதுதான் ஒரு பள்ளியின் நோக்கம். இந்நிலையில் சிறுபான்மை இந்து மேலாண்மை என்ற பேதம் ஏன் ? இந்து மேலாண்மை பள்ளிகள் ஒரு ஆசிாியரைப்ப ணிநீக்கம் செய்ய கல்வித்துறை யின் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற விதி சிறுபான்மை பள்ளிகளுக்கும் பொருந்த வேண்டும். இதுவே சமூக நீதியாகும். சிறுபான்மை சமூகஙகளில் சோ்ந்த சிறுபான்மையினத்தவா்கள் சிறுபான்மையினாில் பெரும்பான்மையினரை ஆதிக்கம் செய்ய இத்தகைய சிறப்ப சட்டங்கள் உதவுகின்றன. minority people of minority community rules the majority of the minority community. தனி உாிமைகள் என்றும் அநீதிக்கே வழி வகுக்கும். சிறுபான்மை சிறப்பு உாிமைகள் மிகவும் மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றது என்பது உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *